தமிழ்நாடு

tamil nadu

சேத்துமான் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

By

Published : May 22, 2022, 8:35 PM IST

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்த 'சேத்துமான் ' திரைப்படம் மே 27ஆம் தேதி சோனி லைவ்வில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சேத்துமான் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சேத்துமான் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: இயக்குநர் பா. இரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக பல்வேறு திரைப்படங்களை தயாரித்துவருகிறார். இவரது தயாரிப்பில் பரியேறும் பெருமாள், குண்டு, ரைட்டர், குதிரைவால், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தன.


அந்த வகையில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’ எனும் சிறுகதையை "சேத்துமான்" எனும் பெயரில் திரைப்படமாக தயாரிக்க நீலம் புரொடக்சன்ஸ் முன்வந்தது. அறிமுக இயக்குனர் தமிழ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

சேத்துமான் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். வசனத்தை எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ளார். இந்த படத்தில் பிந்து மாலினி இசையமைப்பாளராகவும் C.S. பிரேம் குமார் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

இந்த படம் புனே சர்வதேசத் திரைப்பட விழா, கேரளா சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது. சென்னை திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் பெற்றுள்ளது. தாத்தாவிற்கும் பேரனுக்கும் இடையிலான மாசற்ற அன்பைப் பேசும் இப்படத்தில் தாத்தாவாக மாணிக்கமும், பேரனாக அஷ்வினும் நடித்துள்ளனர்.இந்துப் படம் மே 27ஆம் தேதி சோனி லைவ்வில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details