தமிழ்நாடு

tamil nadu

நாதஸ் திருந்திட்டாராம்; யாரு சொன்னா..? அவரே சொன்னாரு!

By

Published : Jun 21, 2022, 8:09 PM IST

நடிகர் வடிவேலுவின் நடவடிக்கைகளில் தற்போது பல மாற்றங்கள் தெரிவதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

நாதஸ் திருந்திட்டாராம்; யாரு சொன்னா..? அவரே சொன்னாரு!
நாதஸ் திருந்திட்டாராம்; யாரு சொன்னா..? அவரே சொன்னாரு!

நடிகர் வடிவேலு ஒரு காலத்தில் செய்யாத அலப்பறைகள் கிடையாது. அந்த அளவுக்கு இவர் மீது ஏகப்பட்ட சர்ச்சைகளும், புகார்களும் இருந்தன. காமெடியனாக இருக்கும் போதே இவருடைய அலப்பறைகள் எல்லை மீறியதுண்டு.

இதில் அவர் ஹீரோவாக மாறியதிலிருந்து சொல்லவே வேண்டாம். வேற லெவல் ரகளையில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாகவே அவருக்கு தமிழ்த்திரையுலகில் 'ரெட் கார்டு' கொடுக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார். தற்போது அவர் அதையெல்லாம், தாண்டி மீண்டும் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி உள்ளார்.

ஆனால், இப்போது அவர் ஆள் ரொம்பவும் மாறிவிட்டார் என்கின்றனர். மேலும் அவர் படப்பிடிப்புகளில் எவ்விதமான பிரச்னையும் செய்யாமல் சுற்றி சுற்றி வேலை செய்துகொண்டிருக்கிறாராம். இதைப் பார்த்த படக்குழுவினர் வடிவேலுவா இது..?! என்றும்; ஒருவேளை மனிதன் திருந்திவிட்டாரோ...?! என்றும் ஆச்சரியப்பட்டு போயிருக்கின்றனர். அந்த அளவுக்கு அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறாராம். மேலும், அவர் இப்போது எங்கு படப்பிடிப்பு நடந்தாலும் குறித்த நேரத்தில் கலந்து கொள்கிறார் என்கின்றனர்.

அந்த வகையில் இவர் தற்போது 'மாமன்னன்' திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தப்படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தில் வடிவேலுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துகொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதில் இவரது பகுதி முடிந்து விட்டது என்கின்றனர். மேலும், 'நாய் சேகர்' படத்தையும் முடித்துக்கொடுத்துவிட்டாராம். இப்படி வடிவேலு நேரத்தை வீணடிக்காமல் தன்னுடைய வேலைகளை மட்டும் பார்த்து வருவதால், படக்குழுவினருக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் அனைத்தும் சுமூகமாக நடைபெறுகிறதாம். இதைப் பற்றிதான் தற்போது திரையுலகில் ஒரே பேச்சாக கிடக்கிறது.

இதையும் படிங்க: Thalapathy 66 : வெளியானது 'வாரிசு' ஃபர்ஸ்ட் லுக்..!

ABOUT THE AUTHOR

...view details