தமிழ்நாடு

tamil nadu

தலைப்பைக் கேட்டு சான்றிதழ் தர மறுத்த சென்சார் போர்டு - 'வாய்தா' பட இயக்குநர்

By

Published : Apr 6, 2022, 8:44 PM IST

படத்தின் தலைப்பைக் கேட்டதும் தணிக்கைச் சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டனர் என்று 'வாய்தா' திரைப்படத்தின் இயக்குநர் மகிவர்மன் தெரிவித்துள்ளார்.

தலைப்பை கேட்டு சான்றிதழ் தர மறுத்த சென்சார் போர்டு - ‘வாய்தா’ திரைப்பட இயக்குநர்
தலைப்பை கேட்டு சான்றிதழ் தர மறுத்த சென்சார் போர்டு - ‘வாய்தா’ திரைப்பட இயக்குநர்

சென்னை: தயாரிப்பாளர் முதல் இசையமைப்பாளர் வரை முற்றிலும் புதுமுகங்களின் முயற்சியாக தயாராகி உள்ள படம் 'வாய்தா'. அறிமுக இயக்குநர் மகிவர்மன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் 'வாய்தா' படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகிறார்.

'ஜோக்கர்', 'கே.டி. என்கிற கருப்பத்துரை' ஆகிய படங்கள் மூலம் பிரபலமான நடிகர் மு.ராமசாமி, நாசர், அறிமுக நாயகி ஜெசிகா பவுலின், 'நக்கலைட்ஸ்' புகழ் பிரசன்னா மற்றும் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற 'வாய்தா' திரைப்படம் இதுவரை 20-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் மகிவர்மன், நடிகர் புகழ், மு.ராமசாமி, நடிகை ஜெசிகா பவுலின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் மகிவர்மன் பேசுகையில், 'முதலில் இப்படத்திற்கு 'ஏகாலி' என்று பெயர் வைத்திருந்தேன். குறிப்பிட்ட சாதியினர் குறித்த பெயராக இருப்பதாகக்கூறி, அதற்கு தணிக்கைக்குழு சான்றிதழ் வழங்க மறுத்துள்ளனர். பல்வேறு பிரச்னைகளைக் கடந்து தற்போது வாய்தாவாக இப்படம் வெளிவர உள்ளது’ என்றார்.

இதையும் படிங்க:' திரைக்கதை எழுதுபவர்களுக்கு ஏற்றது ஓடிடி தான்...' - வெற்றிமாறன்

ABOUT THE AUTHOR

...view details