தமிழ்நாடு

tamil nadu

khatija rahman: இசையமைப்பாளராக களமிறங்கு ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா!

By

Published : Jun 12, 2023, 9:40 PM IST

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் 'சில்லு கருப்பட்டி' பட இயக்குநர் ஹலிதா ஷமீமின் அடுத்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். இதனை புகைப்படத்துடன் ஹலிதா ஷமீம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கும் 'மின்மினி' படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பது மகுடத்தின் மீது வைரக்கல் போல சிறப்பான தருணம் என பார்க்கப்படுகிறது. முன்னணி இசைக்கலைஞர் குடும்பத்திலிருந்து வந்த கதீஜா ரஹ்மான், ஏற்கனவே பல பாடல்களில் தனது குரலில் பாடி இசை ஆர்வலர்களின் கவனத்தை வென்றுள்ளார்.

தற்போது 'மின்மினி' படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்ற செய்தியை ஹலிதா சமீம் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். இப்படத்தை ஹலிதா ஷமீம் எழுதி இயக்குகிறார், மனோஜ் பரமஹம்சா தயாரித்து ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நடிகர்களின் உண்மையான வயதையும் பருவத்தையும் திரையில் காட்ட வேண்டும் என்பதற்காக எட்டு வருடங்களாகக் காத்திருந்து ஒரு திரைப்படத்தைப் படமாக்கும் அதன் முயற்சி சினிமா பார்வையாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் குழந்தை பருவத்திலும், இளமை பருவத்திலும் அவர் அவர்களையே நடிக்க வைத்துள்ளார் ஹலிதா ஷமீம், இதற்காக எட்டு ஆண்டுகள் வரை காத்திருந்தார்.

படப்பிடிப்பின் முதல் கட்டம் 2016 ஆம் ஆண்டு நிறைவடைந்ததைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது, ஹலிதா ஷமீம் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் கதீஜா ரஹ்மானோடு பணி புரிவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், கதீஜா அற்புதமான பாடகர் மட்டுமின்றி திறமை வாய்ந்த இசை அமைப்பாளரும் கூட, அவருடைய அற்புதமான இசை விரைவில் வரவிருப்பதாக தெறிவித்துளார்.

மேலும் கதீஜா ரஹ்மானும் தனது ட்விட்டர் பக்கத்தில், தன்னை ”மின்மினி திரைப்படத்திற்காக தேர்ந்தெடுத்தற்காக நன்றி” எனத் தெரிவித்துள்ளார். ஹலிதா ஷமீம் இந்த ட்விட்டர் பதிவிறக்கு பலர் தங்கள் வாழ்த்துகளையும் தங்களுடைய எதிர்பார்ப்புகளையும் தெரிவித்துள்ளனர். இப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, ஆங்கர் பே ஸ்டுடியோவுடன் இணைந்து 'மின்மினி’ படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் எஸ்தர் அனில், பிரவின் கிஷோர், கௌரவ் காளை, பிரவின் மற்றும் கௌரவ் ஆகியோர் முதன்மை நடிகர்களாக நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்புப் பணிகளை கவனிக்கிறார்.

'பூவரசம் பீப்பி’, ’சில்லு கருப்பட்டி’, ’ஏலே’ மற்றும் அமேசான் பிரைமில் வெளியான 'புத்தம் புது காலை விடியாதா’ எனும் தொடரில் ஒரு பகுதி ’லோனர்ஸ்’ ஆகியவை ஹலிதா ஷமீம் முந்தைய படைப்புகள். அவற்றின் எதார்த்த திரைக்கதை மக்களிடையே நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக மிகவும் பாராட்டப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Nayanthara Wedding Anniversary: விக்கி - நயன் திருமண நாள்: இணையத்தில் வைரலாகும் உயிர், உலக் புகைப்படங்கள்!

ABOUT THE AUTHOR

...view details