தமிழ்நாடு

tamil nadu

ஐஷ்வர்யா ராயை பார்த்தால் பொறாமையாக உள்ளது - நடிகை மீனா

By

Published : Sep 30, 2022, 2:23 PM IST

Updated : Sep 30, 2022, 3:38 PM IST

ஐஷ்வர்யா ராயை பார்த்தால் பொறாமையாக உள்ளது, எனது கனவு கதாப்பாத்திரமான நந்தினி கதாப்பத்திரத்தில் அவர் நடித்துள்ளார் என நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

நடிகை மீனா இன்ஸ்டாகிராம் பதிவு
நடிகை மீனா இன்ஸ்டாகிராம் பதிவு

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நந்தினி கதாப்பத்திரம் தனது கனவு கதாப்பாத்திரம் என நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ”இதுக்கு மேலும் என்னால் இதனை மறைத்து வைத்திருக்க முடியாது. என் வாழ்க்கையில் முதல் முறையாக ஐஷ்வர்யா ராயை பார்த்து பொறாமை கொள்கிறேன். பொன்னியின் செல்வன் படத்தில் எனது கனவு கதாப்பத்திரமான நந்தினி கதாப்பத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

நடிகை மீனா இன்ஸ்டாகிராம் பதிவு

படம் வெற்றி பெற படக்குழுவினரை வாழ்த்துகிறேன்” என பொன்னியின் செல்வன் படத்தின் ஐஷ்வர்யா கதாப்பத்திர புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மீனாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:வெளியானது பொன்னியின் செல்வன் ; ஆதித்த கரிகாலனுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்

Last Updated : Sep 30, 2022, 3:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details