தமிழ்நாடு

tamil nadu

முதல் படத்திலேயே அதிதிக்கு இவ்வளவு சம்பளமா?

By

Published : Aug 10, 2022, 3:31 PM IST

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் முத்தையா இயக்கியுள்ள ''விருமன்'' திரைப்படத்தில் நடிகை அதிதி ஷங்கருக்கு அளிக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

முதல் படத்திலேயே அதிதிக்கு இவ்வளவு சம்பளமா ?
முதல் படத்திலேயே அதிதிக்கு இவ்வளவு சம்பளமா ?

அதிதி இயக்குநர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்தோடு வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்துள்ளார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் முத்தையா இயக்கியுள்ள ''விருமன்'' திரைப்படத்தில் இவர் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமாகி இருக்கிறார்.

அறிமுகப் படத்திலேயே, சூர்யா ''விருமன்'' படத்திற்காக அதிதிக்கு கொடுத்த சம்பளம் பற்றிய தகவல் கசிந்துள்ளது. பொதுவாக ஒரு ஹீரோயினுக்கு அறிமுக படத்தில் ஒரு லட்சத்திற்கும் மேல் சம்பளம் கிடைக்காது. ஆனால், சூர்யா அதிதி சங்கருக்கு கிட்டத்தட்ட 25 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுத்துள்ளாராம். இது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மேலும், முதல் படம் வெளியாவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் ஜோடியாக 'மாவீரன்' திரைப்படத்தில் நடிக்கவும் கமிட்டாகி இருக்கிறார், அதிதி சங்கர். இது பல நடிகைகளுக்கும் பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரபல இயக்குநரின் மகள் என்பதால் தான், அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிவதாகவும் ஒரு பேச்சு திரையுலகில் அடிபடுகிறது.

இதையும் படிங்க:உதயநிதி அடுத்த படத்தின்‌ இயக்குநர் இவரா?

ABOUT THE AUTHOR

...view details