தமிழ்நாடு

tamil nadu

நீச்சலில் அலைபாயும் நடிகர் மாதவனின் மகன் - நாட்டுக்காக 5 தங்க பதக்கங்கள் வேட்டை!

By

Published : Apr 17, 2023, 2:16 PM IST

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் 5 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தி உள்ளார்.

Madhavan
Madhavan

சென்னை : தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என அழைக்கப்படும் நடிகர் மாதவன், அலைபாயுதே, ஜே ஜே, உள்ளிட்ட படங்களில் மூலம் பெண் ரசிகைகளின் உள்ளம் கவர்ந்த நடிகராக வலம் வந்தார். அதேநேரம் தன்னால் Rugged Boy கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என நிரூபித்தவர் மாதவன்.

ஆயுத எழுத்து, தம்பி உள்ளிட்ட படங்களில் Rugged Boy கதாபாத்திரத்தில் நடித்து பெண் ரசிகைகளின் கூடுதல் கவனத்தை பெற்றார். அதன் பின் பாலிவுட் பக்கம் சென்ற அவர் 3 இடியட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து இந்தி ரசிகர்களையும் தன் நடிப்பால் கட்டிப் போட்டார். தீடீரென திரையுலகை விட்டு காணாமல் போன நடிகர் மாதவன், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.

அதை தொடர்ந்து 2017 ஆம் அண்டு புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் நடிகர்கள் மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது. அந்த படத்தில் வரும் கருப்பு வெள்ளை பாடல் இன்றளவும் பலரின் செல்போன் ரிங்டோனாக வலம் வருகிறது.

சமீபத்தில் இயக்குனர் சுதா கொங்கரா வீட்டு விருந்தில் நடிகர் மாதவன் கலந்து கொண்டது சமூக வலைதளங்களில் வைரலானது. இப்படி சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வரும் மாதவன் தற்போது மீண்டும் வைரலாகி உள்ளார். இந்த முறை அவருக்கு பதிலாக அவரது மகன் வேதாந்த் இணையதளவாசிகளால் தேடப்படும் நபராக மாறி உள்ளார்.

கடந்த வாரம் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் பங்கேற்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் 5 தங்கப் பதக்கங்களை அறுவடை செய்து உள்ளார். மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் 2023 ஆம் ஆண்டுக்கான மலேசியன் இன்விடேஷனல் ஏஜ் குருப் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

இந்த தொடரில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் உள்பட இந்தியாவைச் சேர்ந்த நீச்சல் வீரர் வீராங்கனைகளை கலந்து கொண்டனர். இதில் 50, 100, 200, 400 மற்றும் ஆயிரத்து 500 மீட்டர் நீச்சல் போட்டிகளில் வேதாந்த் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்று உள்ளார். தங்கப் பதக்கங்களுடன் மகன் இருக்கும் புகைப்படங்களை நடிகர் மாதன் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

அந்த ட்விட்டர் பதில் நடிகர் மாதவன், "கடவுளின் கருணையாலும் மற்றும் உங்களுடைய வாழ்த்துகளாலும் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடந்த 2023 ஆம் ஆண்டுக்கான மலேசியன் இன்விடேசனல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற வேதாந்த், இந்தியாவுக்காக 50, 100, 200, 400 மற்றும் ஆயிரத்து 500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் 5 தங்க பதக்கங்களை வென்று உள்ளார். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி" என தெரிவித்து உள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நடிகர் மாதவன், தனது மகன் வேதாந்தின் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார். முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டு தொடரில் கலந்து கொண்ட வேதாந்த், ஆடவர் பிரிவில் 100, 200 மற்றும் ஆயிரத்து 500 மீட்டர் பந்தயங்களில் தங்கமும், அதே ஆடவர் பிரிவில் 400 மற்றும் 800 மீட்டர் பந்தயங்களில் வெள்ளிப் பதக்கமும் வென்று இருந்தார்.

இதையும் படிங்க :துபாய் தீ விபத்தில் 2 தமிழர்கள் மரணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்; ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details