தமிழ்நாடு

tamil nadu

விஜய் படத்தை தயாரிக்கிறாரா கமல்..?

By

Published : May 11, 2022, 5:47 PM IST

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும்; அதை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவிருப்பதாக திரையுலக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விஜய் படத்தை தயாரிக்கிறாரா கமல்..?
விஜய் படத்தை தயாரிக்கிறாரா கமல்..?

கமல்ஹாசன் தற்போது சினிமா, அரசியல் என இரண்டிலும் முழுவீச்சாக செயல்பட்டு வருகிறார். இவர் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தியபடி தற்போது படங்களில் நடிப்பதைக் காட்டிலும் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் தற்போது கமல் நடிக்கும் ’விக்ரம்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் வருகிற ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படம் வெளியீட்டுக்கு முன்பே நல்ல வியாபாரம் செய்துவருகிறது. இதனால் கமல் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் விஜயின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்ற செய்தி அண்மையில் வெளியாகியுள்ளது. விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தனது 66ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

மீண்டும் மாஸ்டர் கூட்டணி:இந்நிலையில் ’மாஸ்டர்’ படத்தில் முதன்முதலாக இணைந்த விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதனால் மீண்டும் தளபதி 67இல் இணைய உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தற்போது விஜயின் படத்தை கமல் தனது ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.

விஜயின் படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனைப் படைத்து வருகிறது. சமீபத்தில் வெளியான ’பீஸ்ட்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் பட்டையைக் கிளப்பியது. இந்நிலையில், பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் விஜயின் படத்தைத் தயாரிக்க முன் வருகிறார்கள்.

இச்சூழலில்தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள விஜயின் 67ஆவது படத்தை கமல் தயாரிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த லலித் தயாரிக்க உள்ளதாகவும் விஜயின் 68ஆவது படத்தைத் தான் கமல் தயாரிக்கிறார் என்றும் ஒருபுறம் பேச்சு அடிபடுகிறது.
இதையும் படிங்க: நடிகை மும்தாஜ் வீட்டில் வீட்டுவேலை செய்து வந்த வடமாநில சிறுமிகள் இருவர் பரபரப்பு புகார்!

ABOUT THE AUTHOR

...view details