தமிழ்நாடு

tamil nadu

ரூ.100 கோடி வசூலித்த அஜித்தின் 'துணிவு'

By

Published : Jan 14, 2023, 4:23 PM IST

எச்‌.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியாகியுள்ள துணிவு திரைப்படம் 100 கோடி ரூபாயை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.

thunivu
thunivu

சென்னை:எச்.வினோத் - அஜித் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் "துணிவு". இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகை விடுமுறையினை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது.

இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய் வரை வசூலித்தது. நான்காவது நாளாக, இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் தற்போது வரை 103 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் போனி கபூரும் இதனை உறுதிபடுத்தியுள்ளார். துணிவு படத்தின் வசூல் சாதனையை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரசிகர்களுடன் 'துணிவு' படத்தை பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர்!

ABOUT THE AUTHOR

...view details