தமிழ்நாடு

tamil nadu

காதலியுடனான உறவை மறுக்கும் காட்பாதர் நடிகர்... இது என்ன புது பிரச்சினை!

By

Published : Jun 1, 2023, 3:34 PM IST

காதலியுடனான உறவை முறித்து நீண்ட நாட்கள் ஆவதாகவும், நூர் அலிபாவுடன் தொடர்பில் இல்லை என்றும் மரபணு சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஹாலிவுட் நடிகர் அல் பாசினோ தெரிவித்து உள்ளார்.

Al facino
Al facino

ஐதராபாத் : 83 வயதான காட்பாதர் பட புகழ் அல் பாசினோ, விரைவில் 4வது குழந்தைக்கு தந்தையாக உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அந்த தகவல் வதந்தி என்றும் இளம் காதலி நூர் அல்பாஃவுடன் உறவை துண்டித்து நீண்ட நாட்கள் ஆவதாகவும் அல் பாசினோ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் நூர் அல்பாஃவுக்கு பிறக்கும் குழந்தைக்கு தந்தை யார் என்பதை கண்டறியும் மரபணு சோதனை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது. 1972ஆம் ஆண்டு வெளியான காட்பாதர் படத்தின் மூலம் பிரபலமானவர் அல் பாசினோ. 1940 ஆம் ஆண்டு பிறந்த அல் பாசினோ காட் பாதர் மூன்று பாகங்களிலும் நடித்து இருந்தார்.

மெதட் ஆக்டிங் வழிமுறை நடிப்பை பின்பற்றுபவரான அல் பாசினோ பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்து உள்ளார். ஹீட், ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ஹாலிவுட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் கொண்டு இருந்தார். ஆஸ்கர் விருது டோனி விருது, பிரைம் டைம் எம்மி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்று குவித்து உள்ளார்.

83 வயதாகும் அல் பாசினோவுக்கும், பெண் தோழி நூர் அல்பாஃவுக்கு இடையே நெருக்கம் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. அல் பாசினோவும், 29 வயதான நூர் அல்பாஃவும் கரோனா காலத்தில் டேட்டிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இரவு நேர கேளிக்கை விடுதிகளில் இருவரும் டேட்டிங் செய்து வந்ததாக கூறப்படும் நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வந்தது.

நூர் அல்பாஃ தற்போது 8 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறப்பட்டது. 83 வயதாகும் அல் பாசினோ விரைவில் 4வது குழந்தைக்கு தந்தையாக உள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் அந்த தகவலை அவர் முற்றிலும் மறுத்து உள்ளார். நூர் அல்பாவுடனான உறவை துண்டித்து நீண்ட நாட்கள் ஆவதாகவும், அவர் கர்ப்பமாக இருக்கும் தகவல் முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர்களை கொண்டு சட்ட ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், நூர் அலபாஃவின் குழந்தைக்கு மரபணு சோதனை மேற்கொண்ண வேண்டும் என கோர உள்ளதாகவும் அவர் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. கரோனா காலத்தில் தனது 22 வயது மகள் ஒலிவியாவின் மூலம் நூர் அல்பா பழக்கம் ஏற்பட்டதாகவும், இருவரும் ஒன்றாக ஊர் சுற்றியதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இருவரும் பிரிந்து நீண்ட நாட்களாகும் நிலையில், அவர் கர்ப்பமாக இருக்கும் தகவல் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டு உள்ளது. இந்த செய்தியினால் தனது மகன் மற்றும் மகள்கள் மிக மனவேதனை அடைந்து உள்ளதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :Karnataka Plane Crash: கர்நாடகாவில் ராணுவ பயிற்சி விமானம் விபத்து!

ABOUT THE AUTHOR

...view details