தமிழ்நாடு

tamil nadu

“கேப்டன் மில்லர்” படம் வெளிவரும் முன்பே மீண்டும் நடிகர் தனுஷ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இணையும் புதிய படத்தின் அப்டேட்

By

Published : Aug 20, 2023, 3:35 PM IST

Dhanush starrer Captain Miller: “கேப்டன் மில்லர்” இயக்குநா் அருண் மாதேஸ்வரன் உடன் தனுஷ் இணையும் புதிய படம் குறித்து தகவலை ஒன்டர்பார் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் தொிவித்துள்ளது. - வெகு நாட்களுக்கு பிறகு ஒன்டர்பார் நிறுவனம் தயாரிக்க உள்ள படம் இதுவாகும்.

Dhanush
Dhanush

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான "வாத்தி" திரைப்படம் கணிசமான வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் தனது மூன்றாவது படத்தை நடிகர் தனுஷை வைத்து இயக்கும் வாய்ப்பு பெற்றவர் அருண் மாதேஸ்வரன். இவர் தனது முதல் படமான 'ராக்கி' படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பின்னர், இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் நடிப்பில் வெளியான ‘சாணிக்காயிதம்' திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குநராக வலம் வந்தவர்.

தற்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தை பிரமாண்டமான முறையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தனுஷ் மற்றும் நடிகை பிரியங்கா மோகன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். மேலும், இப்படத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

"கேப்டன் மில்லர்" படத்தில் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத்தொடர்ச்சிமலை" ஆண்டனி, பால சரவணன் மற்றும் சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படம் 1930-40 காலக்கட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்றுத் திரைப்படமாக உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

கேப்டன் மில்லர் படம் வெளியாவதற்கு முன்பே இந்த அறிவிப்பு வந்துள்ளது. மேலும் இப்படத்தை தனுஷின் ஒன்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த நிறுவனம் தயாரிக்கும் படம் இதுவாகும். இது குறித்து மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் தனது திரை வாழ்வில் மிகப் பெரிய உச்சத்தில் தற்போது இருக்கிறார். இவரது படங்கள் மொழி கடந்தும் ரசிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Shiva rajkumar: "நானும் சென்னையில் பிறந்து வளர்ந்தவன் தான்" - சிலாகிக்கும் சிவ ராஜ்குமார்!

ABOUT THE AUTHOR

...view details