தமிழ்நாடு

tamil nadu

திமுக கொடி கம்பத்திற்கு தீ வைத்த இளைஞர் கைது

By

Published : Mar 14, 2021, 9:43 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே திமுக கொடி கம்பத்திற்கு தீ வைத்து எரித்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Youth arrested for setting fire to DMK flag pole
Youth arrested for setting fire to DMK flag pole

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் ஊராட்சி பேருந்து நிலையத்தில் உள்ள தலைவர்களின் சிலைகள், கொடி கம்பங்கள் ஆகியன தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி துணியால் சுற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், துணியால் சுற்றப்பட்டிருந்த திமுக கொடி கம்பத்திற்கு நேற்று (மார்ச் 13) அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தீ வைத்துள்ளார். இதுகுறித்து அம்பலூர் காவல் நிலையத்தில் திமுகவினர் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியை சேர்ந்த லிதீஷ் குமார் குடிபோதையில் கொடி கம்பத்தை எரித்தது தெரியவந்தது. உடனே அவரை காவல் துறையினர் கைது செய்தனர். தேர்தல் சமயத்தில் திமுக கொடி கம்பத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: டார்க் இணையதளத்தை பயன்படுத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த இளைஞர்கள்

ABOUT THE AUTHOR

...view details