தமிழ்நாடு

tamil nadu

கடமை தவறிய இரு காவலர்கள் இடமாற்றம்!

By

Published : Jul 25, 2021, 6:21 AM IST

பேர்ணாம்பட்டு பகுதியில் சூதாட்டம் குறித்து நடவடிக்கை எடுக்க தவறிய பேர்ணாம்பட்டு ஆய்வாளர் மற்றும் எஸ்.பி.தனிப்பிரிவு காவலர் செல்வராஜ் ஆகியோரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து வேலூர் எஸ்.பி செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.

Two police officers transfer
Two police officers transfer

வேலூர்: பேர்ணாம்பட்டு அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டு சம்பாதித்த 25 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். ஃபைனான்ஸ் மற்றும் ஹார்டுவேர் கடை நடத்தி வரும் இவர், தனது நண்பர்களுடன் குடியாத்தத்தில் இருந்து நாட்றம்பள்ளி நோக்கி காரில் செல்லும் போது இவர்களை பின்தொடர்ந்து மற்றோரு காரில் வந்த நபர்கள், ஞானசேகரன் சென்ற காரை மடக்கி அவரிடம் இருந்த சுமார் 25 லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இதுகுறித்து ஞானசேகரன் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர், ஞானசேகரன் பறிகொடுத்த 25 லட்சம் ரூபாய் பணமும் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டு சம்பாதித்து என்பதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து, வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே மோரசபள்ளி பகுதியில் பல லட்சம் ரூபாய் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாகவும், அதை தடுத்து நடவடிக்கை எடுக்க தவறிய பேர்ணாம்பட்டு காவல் ஆய்வாளர் வெங்கடேசன், எஸ்.பி. தனிப்பிரிவு காவலர் செல்வராஜ் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து வேலூர் எஸ்.பி. செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ரூபாய் 25 லட்சம் பணத்தை வழிபறி செய்தது தொடர்பாகவும், பேர்ணாம்பட் பகுதியில் நடைபெறும் சட்டவிரோதா சூதாட்டம் தொடர்பாகவும் திருப்பத்தூர், வேலூர் என இருமாவட்ட காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பணி நீக்கம்: தனியார் பைனான்ஸ் நிறுவன உரிமையாளரை தாக்கிய ஊழியர்

ABOUT THE AUTHOR

...view details