தமிழ்நாடு

tamil nadu

பெயர் மாற்றி போலி மருத்துவம் - மருத்துவர் கைது

By

Published : Jul 27, 2021, 6:08 AM IST

ஆம்பூர் அருகே கிளினிக் அமைத்து மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

Fake doctor arrest
Fake doctor arrest

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியில் மருத்துவம் படிக்காத நபர் கிளினிக் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், பெரியங்குப்பம் சந்தக்கடை மைதானம் பகுதிக்கு சென்ற ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் கிளினிக் அமைத்து மருத்துவம் பார்த்து வந்த மதன்ராஜ் என்பவரைா காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அவர் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்த மோகன்(38) என்பதும், உரிய முறையில் மருத்துவம் படிக்காமல் பெரியாங்குப்பம் கிராமத்தில் தனது பெயரை மருத்துவர் மதன் என மாற்றிக்கொண்டு கிளினிக் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டு வருவதும் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து போலி மருத்துவர் மோகன் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர். அவரை கைது செய்தனர்.

மேலும் இதுபோன்று சந்தேகிக்கும் வகையில் செயல்பட்டு வரும் இரண்டு பேரிடம் ஆம்பூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது?

ABOUT THE AUTHOR

...view details