தமிழ்நாடு

tamil nadu

காரில் இருந்து சடலம் விழும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

By

Published : Jan 4, 2022, 2:24 PM IST

காரில் அடிபட்டு நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டு பெட்ரோல் பங்க் அருகே காரில் இருந்து சடலம் விழும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரில் இருந்து சடலம் விழும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி
காரில் இருந்து சடலம் விழும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

திண்டுக்கல்மாவட்டம் வேடசந்தூர் அடுத்த வடமதுரை அருகே உள்ள நாடுகண்டானூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் வெள்ள பொம்மன்பட்டி பிரிவு அருகே உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த (ஜன.1) சனிக்கிழமை இரவு இவர் பணியிலிருந்தபோது திருச்சி நோக்கிச் சென்ற கார் ஒன்று பெட்ரோல் நிரப்ப வந்துள்ளது. அப்போது அந்த காரில் மாட்டியிருந்த பிரேதம் ஒன்று பெட்ரோல் பங்கின் நுழைவு வாயிலில் விழுந்துள்ளது.

காரை ஓட்டி வந்த ஓட்டுநரும் காரில் இருந்தவர்களும் நீண்ட நேரமாகச் சடலம் விழுந்ததைக் கவனிக்காத நிலையில் அருகிலிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர் கவனித்து காரில் வந்தவர்களிடம் கேட்க முயற்சி செய்தனர். அவர்களைப் பார்த்துச் சுதாரித்துக்கொண்ட காரில் வந்தவர்கள் பெட்ரோல் பங்கிலிருந்து காரை வேகமாக எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

காரில் இருந்து சடலம் விழும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

இச்சம்பவம் குறித்து வடமதுரை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கிருந்த சடலத்தின் அருகே ஒரு பை இருந்ததைக் கண்டு அதைச் சோதனை செய்தனர்.

அதிலிருந்த ஒரு செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது இறந்த நபர் விழுப்புரம் மாவட்டம், பொங்கம்பட்டு தெருவைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் என்பது தெரியவந்தது.

ஓம் பிரகாஷ் பழனிக்குச் சென்று சாமி சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்குச் சென்று சென்றதாகவும் அப்போது பேருந்தில் சென்ற போது அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததால் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் அவரை வடமதுரை பெட்ரோல் பங்க் அருகே இறக்கிவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்று மோதி ஓம்பிரகாஷ் இறந்ததும், காரில் பிரேதம் சிக்கி இருந்ததை அறியாத கார் ஓட்டுநர் காரை நீண்ட தூரம் ஓட்டி வந்ததும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்யத் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் பெட்ரோல் பங்கிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து அங்கிருந்து நிற்காமல் சென்ற காரின் பதிவு எண்ணைக் கண்டுபிடித்தனர். அதில் ஓம் பிரகாஷ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை ஓட்டிச் சென்றது புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரில் அடிபட்டு நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டு பெட்ரோல் பங்க் அருகே காரில் இருந்து சடலம் விழும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கரோனா.. ஒரு லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதி!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details