தமிழ்நாடு

tamil nadu

அரசு வாகனத்தை அசால்டாக திருடிய பிச்சைக்காரர் கைது

By

Published : Dec 17, 2022, 12:41 PM IST

அகமதாபாத்தில் அரசு வாகனத்தை திருடிய பிச்சைக்காரரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அரசு வாகனத்தை அசால்டாக திருடிய பிச்சைக்காரர் கைது!
அரசு வாகனத்தை அசால்டாக திருடிய பிச்சைக்காரர் கைது!

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் ஜமால்பூரின் கீதா மந்திர் எஸ்டி பேருந்து நிலையம் அருகே முனிசிபல் கார்ப்பரேஷன் அலுவலகம் உள்ளது. இங்கு நிறுத்தப்பட்டிருந்த சுகாதார அலுவலரின் அரசு வாகனம் திருடுபோனது. இதுகுறித்து கயக்வாத் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சாஹில் மக்சுத்கான் பதான் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வியப்பான தகவல்கள் வெளிவந்துள்ளது. கைது செய்யப்பட்ட பதான், வாகனம் திருடுபோன அதே அரசு அலுவலகத்தின் முன்பு பிச்சை எடுத்து வந்தவர்.

இதனிடையே அரசு வாகனத்தை வதோதரா வரை திருடி சென்றுள்ளார். அதன்பின் காரில் இருந்த டீசல் காலியாகியுள்ளது. அப்போது, கையில் பணம் இல்லாததால் காரை அங்கேயே நிறுத்திய பதான், மீண்டும் அகமதாபாத்துக்கே திரும்பி வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட பதான் மீது வேறு ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:போலீஸ் வண்டியையே ஸ்கெட்ச் போட்டு அபேஸ் செய்த 'பலே' திருடர்கள்

ABOUT THE AUTHOR

...view details