தமிழ்நாடு

tamil nadu

எருது விடும் விழாவில் ரயில் மோதி காளை உயிரிழப்பு

By

Published : Mar 26, 2022, 2:41 PM IST

கணியம்பாடி அடுத்த வேப்பம்பட்டு கிராமத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற காளை விடும் திருவிழாவின் போது காளை ஒன்று எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காளை உயிரிழந்த சோகம்
காளை உயிரிழந்த சோகம்

வேலூர்: வேப்பம்பட்டு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 58ஆம் ஆண்டு மயானக் கொள்ளை திருவிழாவை முன்னிட்டு மார்ச் 25ஆம் தேதியான நேற்று 25ஆம் ஆண்டு காளை விடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்தக் காளை விடும் விழாவில் வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. குறைந்த நிமிடங்களில் இலக்கை அடைந்த 51 காளைகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

காளை விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

முதல் பரிசாக ரூ.60,001, இரண்டாம் பரிசாக ரூ.50,001, மூன்றாம் பரிசாக ரூ.40,001, நான்காம் பரிசாக ரூ.30,001 என சீறிப்பாய்ந்த 51 காளைகளுக்கு விழாக்குழுவின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், காளை விடும் விழாவிற்கு மூஞ்சூர்பட்டு கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் அசுரன் என்ற தனது காளையை அழைத்து வந்தபோது ரமேஷ் பிடியிலிருந்து தப்பி ஓடிய காளையின் கயிறு, அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டு அவ்வழியாக வந்த திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி, காளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது காளை விடும் விழாவிற்கு வந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ஒரு நாளில் 20 மணி நேரம் உழைக்கும் ஒரே ஒரு முதலமைச்சர் ஸ்டாலின் தான் - அமைச்சர் மெய்யநாதன் புகழாரம்

ABOUT THE AUTHOR

...view details