தமிழ்நாடு

tamil nadu

வேலூரில், கஞ்சாவை கவ்விப் பிடிக்கும் மோப்ப நாய்கள்- எஸ்.பி. பாராட்டு

By

Published : Apr 3, 2022, 10:16 PM IST

தமிழ்நாடு-ஆந்திர எல்லையான கிருஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடி அருகே கஞ்சா கடத்தலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்ட மோப்ப நாய் பிரிவு காவலர்கள் கஞ்சா போதைப்பொருட்கள் கடத்திய 3 பேரை கைது செய்துள்ளனர்.

சிறப்பித்த எஸ்.பி
சிறப்பித்த எஸ்.பி

வேலூர்: தமிழ்நாட்டில் கஞ்சா கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க தமிழ்நாடு காவல்துறையினர் அண்மைக் காலங்களாகத் தீவிரம்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், காட்பாடியை அடுத்த தமிழ்நாடு-ஆந்திர எல்லையான கிருஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடி வழியாக அதிகப்படியான கஞ்சா கடத்துவதாக வந்த புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, அதனைத் தடுக்கும் பணியில் தமிழ்நாடு காவல்துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், கடந்த இரண்டு வாரங்களாக மோப்ப நாய் பிரிவை சேர்ந்த "சிம்பா" என்ற மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டது.

இந்த மோப்ப நாய் கொண்டு ஆந்திராவில் இருந்து வரும் தமிழ்நாடு அரசு பேருந்துகளில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனையில், 30கிலோ அளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை தமிழ்நாட்டிற்கு கடத்தி வந்த 3பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாராட்டு சான்றிதழ் பெறும் மோப்ப நாய் பிரிவு காவலர்கள்

கெட்டிக்கார மோப்ப நாய்களுக்கு பாராட்டு சான்றிதழ்: இதன் தொடர்ச்சியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை கண்டுபிடிக்கும் விதமாக மோப்ப நாய் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

இதில் சிறப்பாக செயல்பட்டு வரும் மோப்ப நாய் பிரிவு காவலர்களை பாராட்டும் வகையிலும், நாய்களை கௌரவிக்கும் வகையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் வசந்தபுரத்தில் உள்ள மோப்ப நாய் பிரிவுக்கு சென்று அங்குள்ள மோப்ப நாய்களான சிம்பா, சாரா, உள்ளிட்ட 4 மோப்ப நாய்களைப் பார்வையிட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் மோப்ப நாய் பிரிவு காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

அப்போது செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், 'இனிவரும் காலங்களிலும் கஞ்சா கடத்தல் தடுப்பு பணியில் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படும். வருகிற ஒருவாரத்துக்குள் கஞ்சா விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்' என எஸ்.பி ராஜேஷ்கண்ணண் கூறினார்.

இதையும் படிங்க: ஹைதராபாத் பப்பில் அதிகாலை அதிரடி ரெய்டு!

ABOUT THE AUTHOR

...view details