தமிழ்நாடு

tamil nadu

குடும்பத்தை ஒதுக்கி வைத்த நாட்டாமை: இன்றளவு அரங்கேறும் பஞ்சாயத்து அவலம்!

By

Published : Aug 27, 2019, 8:52 PM IST

வேலூர்: காவல் நிலையத்தில் புகார் அளித்ததால், நாட்டாமை ஒரு குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கி வைத்த அவலம் அரங்கேறியுள்ளது.

காவல் நிலையம் சென்ற குடும்பத்தை ஒதுக்கி வைத்த நாட்டாமை: இன்றளவு அரங்கேறும் பஞ்சாயத்து அவலம்!


வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது விகே.தாமோதர புரம். மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில்தான் இன்றளவும் பஞ்சாயத்து மூலம் நாட்டாமை தீர்ப்பு வழங்கி பொதுமக்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் சம்பவம் அரங்கேறிவருகிறது.

அந்தவகையில், அந்த ஊரைச் சேர்ந்த பத்மநாபன், அவரது லதா, அவரது 11 வயது மகன் நிர்மல்ராஜ் ஆகிய மூவரும் நாட்டாமையால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அவலம் அரங்கேறியுள்ளது. பத்மநாபன் குடும்பத்திற்கும் பக்கத்து வீட்டுக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக காவல்நிலையத்தில் பத்மநாபன் மனு அளித்துள்ளார். இதுதொடர்பாக வேலூர் நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நான் இருக்கும்போது எப்படி காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று ஆத்திரம் அடைந்த நாட்டாமையான சலோபரி, லதாவை பஞ்சாயத்திற்கு அழைத்து பொதுமக்கள் முன்னிலையில் தரக்குறைவாக பேசியுள்ளார். மேலும் வழக்கை திரும்ப பெறாவிட்டால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதில் லதா வழக்கை திரும்ப பெற முடியாது என கூறியதால், லதா மற்றும் அவரது குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து நாட்டாமை சலோபரி தீர்ப்பளித்துள்ளார். அது மட்டுமின்றி உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் உயிருடன் வைத்துக் கொளுத்திவிடுவோம் எனவும் நாட்டாமை தரப்பு மிரட்டியுள்ளனர்.

காவல் நிலையம் சென்ற குடும்பத்தை ஒதுக்கி வைத்த நாட்டாமை!

இதனால் வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊர் நாட்டாமை தரப்பில் இருந்து தனக்கு வரும் மிரட்டல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் பத்மநாபன்-லதா வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Intro:நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்பும் இந்த நவீன காலத்திலும் ஊர் நாட்டாமை தீர்ப்புக்கு கட்டுப்படும் பொதுமக்கள்-- பக்கத்துவீட்டு தகராறுக்காக ஒரு குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த அவலம் --நாட்டாமை மிரட்டல் விடுப்பதாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட காவல்துறைBody:உள்ளூர் நீதிமன்றம் தொடங்கி ஐகோர்ட் சுப்ரீம் கோர்ட்டு வரை நாள்தோறும் அனல்பறக்கும் வழக்குகள் வாதாடும் இந்த சூழலில் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் இன்றும் பஞ்சாயத்து நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு ஊர் நாட்டாமை தீர்ப்பு வழங்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அதாவது வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது விகே.தாமோதர புரம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் தான் இன்றளவும் பஞ்சாயத்து மூலம் நாட்டாமை தீர்ப்பு வழங்கி பொது மக்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது அந்த வகையில் தற்போது பக்கத்துவீட்டு தகராறு காரணமாக ஒரு குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர் அதாவது இந்த பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் இவரது மனைவி லதா இவர்களுக்கு 11 வயதில் நிர்மல்ராஜ் என்ற ஒரு மகன் உள்ளார் இந்நிலையில் பக்கத்து வீட்டு பெண்களுடன் அவருக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளார் இதுதொடர்பாக வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது ஊர் நாட்டாமை நான் இருக்கும் போது எப்படி காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று ஆத்திரம் அடைந்த நாட்டாமை சலோபரி, லதாவை பஞ்சாயத்திற்கு அழைத்து அங்கு அவரை நிற்க வைத்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது பொதுமக்கள் முன்னிலையில் தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது மேலும் வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர் ஆனாலும் வழக்கை வாபஸ் வாங்க மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்ததால் லதா மற்றும் அவரது குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி நாட்டாமை சலோபரி தீர்ப்பளித்துள்ளார் மேலும் அவருடன் யாரும் அண்ணன் தண்ணீர் புழங்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார் நாட்டாமை தீர்ப்புக்கு கட்டுப்பட்டு லதாவிடம் அப்பகுதி பொதுமக்கள் யாரும் பேசுவதில்லை இதற்கிடையில் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து உள்ளதால் உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் இல்லாவிட்டால் உயிருடன் வைத்துக் கொளுத்தி விடுவோம் என்று நாட்டாமை தரப்பு மிரட்டுவதாக கண்ணீருடன் தெரிவிக்கிறார் லதாவின் கணவர் பத்மநாபன் கேரளாவில் தங்கி பணிபுரிந்து வருக்கிறார் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது தான் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம் இதனால் லதா தினமும் தனது மகனுடன் அச்சத்துடன் நாட்களை கழித்து வருகிறார் எனவே வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊர் நாட்டாமை தரப்பில் இருந்து தனக்கு ஒரு மிரட்டல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்Conclusion:

ABOUT THE AUTHOR

...view details