தமிழ்நாடு

tamil nadu

மார்தட்டும் மற்றவர்கள் கிட்டுமா வெற்றி - வேட்பாளர்களின் வேகம்

By

Published : Feb 10, 2022, 4:07 PM IST

திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்கள், வார்டுகள் பற்றிய தொகுப்பைக் காணலாம்.

மார்தட்டும் மற்றவர்கள் கிட்டுமா வெற்றி
மார்தட்டும் மற்றவர்கள் கிட்டுமா வெற்றி

திருச்சி: திராவிட கட்சிகளான திமுக, அதிமுக இடையேதான் கடும் போட்டி என்றாலும்கூட நாங்களும் இருக்கிறோமே மம்மி என பாஜக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் இவர்களோட சில முக்கியப் பிரமுகர்களும் சுயேச்சையாகக் களத்தில் இருக்கிறார்கள்.

ஏன்? எதற்கு? எப்படி என்ற கேள்வி எழுகிறதா? இப்படிதாங்க, பாரதிய ஜனதா கட்சி சார்பாக இரண்டாவது வார்டில் கோவிந்தராஜன் போட்டியிடுகிறார்.

பாஜக சார்பில் சொல்லிக்கொள்ளும்படி இருக்கும் ஒரே ஒரு நபர் இவர்தான். அமமுக சார்பாக அனைத்து வார்டுகளிலும் போட்டியிட்டாலும் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து இழுப்பது இருவர் மட்டுமே முன்னாள் அதிமுக கொறடா மனோகரன் கட்டுப்பாட்டில் வருகிறது.

மார்தட்டும் மற்றவர்கள் கிட்டுமா வெற்றி

இவர்கள் நிற்கும் வார்டுகள். 1ஆவது வார்டில் லதா நிற்கிறார் இவர் முன்னாள் கோட்டத் தலைவரும்கூட அதேபோல 4ஆவது வார்டில் அம்சவள்ளி நிற்கிறார். இது மனோகர் வசிக்கும் வார்டு என்பதோடு மனோகரின் உறவினர் என்பதால் கூடுதல் கவனம் பெருகிறது.

இந்த வார்டு கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் களத்தில் இருந்தாலும், அதில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களில் ஒரே ஒரு நபர்தான் வழக்கறிஞராக உள்ள கிஷோர்குமார் இவரது சொந்த வார்டைவிட்டு 2ஆவது வார்டில் களமிறங்கவில்லை என்பதால் வெற்றி கேள்விக்குறிதான் என்கிறார்கள் வார்டு வாசிகள், சுயேச்சையாக களத்தில் குதித்து இருக்கிறார்கள்.

மார்தட்டும் மற்றவர்கள் கிட்டுமா வெற்றி

சீட் கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டி

நால்வர், இவர்களின் தாத்பிரியங்கள் அப்படி... செளரிராஜன் திருவரங்கம் முழுவதும் அறியப்பட்டவர் டிராவல்ஸ் நடத்துகிறார். நல்லது கெட்டதுகளில் களமிறங்கி கலக்குபவர் இவர் 2ஆவது வார்டில் போட்டியிடுகிறார். வேலு இவர் நிற்பது 14 ஆவது திமுக சார்பாக போட்டியிட சீட் கிடைக்காததால் இம்முறை மீண்டும் சுயேச்சையாகக் களமிறங்குகிறார்.

மார்தட்டும் மற்றவர்கள் கிட்டுமா வெற்றி

அதென்னங்க மீண்டும் ஏற்கனவே ஒருமுறை சீட் மறுக்கப்பட சுயேச்சையாக நின்று வென்று மீண்டும் திமுகவில் ஐக்கியம் ஆனவர்தான் வேலு இவரைப்பற்றி ஏற்கனவே நாம் பேசிவிட்டோம் இருந்தாலும் சொல்லிவிடுவோம் காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

53ஆவது வார்டில் நான்காவது நபர் ராமமூர்த்தி நான்குமுறை கவுன்சிலராக இருந்தவர் இம்முறை திமுகவில் சீட் மறுக்கப்படவே மீண்டும் ரவுசு காட்ட சுயேச்சையாக களமிறங்கிவிட்டார். இவர் நிற்பது 54ஆவது வார்டில் ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்பொழுது இவர்கள் எப்படி என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஓபிஎஸ் கோரிக்கை

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details