தமிழ்நாடு

tamil nadu

கைதுக்கு முன் அமைச்சரை ஒத்தைக்கு ஒத்தை அழைத்த சூர்யா சிவா!

By

Published : Jun 24, 2022, 2:26 PM IST

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தனது அமைச்சர் பதவியை விலக்கி விட்டு வந்தால், ஒத்தைக்கு ஒத்தை நிற்க நான் தயார்’ என தமிழ்நாடு பாஜக ஓபிசி பிரிவு பொதுச்செயலாளர் சூர்யா சிவா சவால் விடுத்துள்ளார்.

கைதுக்கு முன் அமைச்சர் அன்பில் மகேஷை ஒத்தைக்கு ஒத்தை அழைத்த சூர்யா சிவா!
கைதுக்கு முன் அமைச்சர் அன்பில் மகேஷை ஒத்தைக்கு ஒத்தை அழைத்த சூர்யா சிவா!

திருச்சி: தமிழ்நாடு பாஜக ஓபிசி பிரிவு பொதுச்செயலாளரும், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனுமான சூர்யா சிவா திருச்சி பறவைகள் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சூர்யா சிவா, “திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி திருநாவலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பிடிஓ அலுவலகம் எதிரே காரில் சென்று கொண்டிருந்த பொழுது பின்புறமாக வந்த ஸ்ரீ கிருஷ்ணா டிராவல்ஸ் பேருந்து எனது காரின் பின்புறம் மோதியதில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

தனது கார் மட்டுமில்லாமல் 4 கார் மீது அந்த பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக திருநாவலூர் காவல் நிலையத்தில் ஜூன் 12 ஆம் தேதி புகார் செய்துள்ளேன். ஆனால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனது காரின் மீது மோதிய பேருந்திற்கு பர்மிட் இன்சூரன்ஸ் போன்ற எந்தவித ஆவணங்களும் இல்லை.

அதேபோல் போலியான ஆவணங்களைக் கொண்டு பர்மிட் இல்லாமல் ஸ்ரீ கிருஷ்ணா டிராவல்ஸ் நிறுவனத்தின் கீழ் 20 க்கும் மேற்பட்ட பேருந்துகள் தற்போது வரை இயங்கி வருகிறது. தற்பொழுது எனது கார் மீது மோதிய பேருந்தை நான் கடத்திச் சென்றதாக என் மீது திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் என்னை கைது செய்யலாம்.

கைதுக்கு முன் அமைச்சர் அன்பில் மகேஷை ஒத்தைக்கு ஒத்தை அழைத்த சூர்யா சிவா!

இது அனைத்தும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தலின்படி , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காவல்துறையினரை கையில் வைத்து கொண்டு ஸ்ரீ கிருஷ்ணா டிராவல்ஸ் என் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளது. திமுக அரசில் யாரும் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் கூறி வருகிறார். ஆனால் இந்த விஷயத்தில் முழுக்க முழுக்க திமுக அமைச்சர்கள் கட்டப்பஞ்சாயத்தில் இறங்கியுள்ளனர்.

திமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்கள் குறித்த ரகசியங்களை வெளியிட்டால் அவர்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு இருக்கும். ஒரு அளவிற்கு நான் பொறுமையாக இருக்கிறேன். அதன் பின்னர் அனைவருடைய ரகசியங்களையும் வெளியிட்டு விடுவேன். தனது அமைச்சர் பதவியை விலக்கிவிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வந்தால் ஒத்தைக்கு ஒத்தை நிற்க நான் தயார்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சூர்யா சிவாவை கைது செய்த காவல்துறையினர், அவரை திருச்சி காண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையில் திருச்சி மாவட்ட பாஜகவினர் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திருச்சி சிவா மகன் கைது - எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம் - சீறிய அண்ணாமலை...

ABOUT THE AUTHOR

...view details