தமிழ்நாடு

tamil nadu

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளிடம் திமுக விடாப்பிடி.. தொட்டியம் பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு!

By

Published : Mar 26, 2022, 7:16 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட துணைத் தலைவர் பதவியை திமுக கட்சியின் தலைமை அறிவித்தும் திமுகவினர் ஒத்துக்கொள்ளாமல் புறக்கணிப்பைக் கடைபிடித்து வருவது கூட்டணி கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஒத்திவைப்பு
தேர்தல் ஒத்திவைப்பு

திருச்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நின்று வெற்றி பெற்ற திமுகவினர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னை வந்து நேரில் சந்திக்குமாறு கூறியிருந்தார்.

இந்த நிலையில், தொட்டியம் பேரூராட்சியில் துணைத் தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதில், திமுகவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து திமுக கவுன்சிலர் ராஜேஷ், தனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் (மார்ச் 26) இன்று துணைத்தலைவர் பதவிக்கு காலை 9.30 மணிக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று திமுகவை சேர்ந்த பேரூராட்சி தலைவரை தவிர மற்ற 9 திமுக வார்டு உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதிமுக உறுப்பினர்கள் ஐயப்பன், ராஜேந்திரன், சோபனா மற்றும் சிபிஎம் உறுப்பினர் கலைச்செல்வி ஆகியோர் மட்டும் வந்திருந்தனர்.

திமுகவினரின் புறக்கணிப்பால் தொட்டியம் பேரூராட்சி துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

தேர்தல் ஒத்திவைப்பு: திமுக வார்டு உறுப்பினர்கள் யாரும் வராததால் துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் காளிமுத்தன், தேர்தல் மேற்பார்வையாளர் மாதவன், செயல் அலுவலர் சண்முகம் முன்னிலையில் அறிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட துணைத் தலைவர் பதவியை கட்சியின் தலைமை அறிவித்தும் திமுகவினர் ஒத்துக்கொள்ளாமல் மோதல் போக்கை கடைபிடித்து வருவது கூட்டணி கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஒரு நாளில் 20 மணி நேரம் உழைக்கும் ஒரே ஒரு முதலமைச்சர் ஸ்டாலின் தான் - அமைச்சர் மெய்யநாதன் புகழாரம்

ABOUT THE AUTHOR

...view details