தமிழ்நாடு

tamil nadu

சூரியூரில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் மனு!

By

Published : Feb 9, 2021, 6:31 PM IST

திருச்சி: திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

மனு
மனு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது தலைமையில் 50க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் நேற்று (பிப். 8) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆட்சியர் சிவராசுவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

அதில், “சூரியூர் அந்தோணியார் கோயில் தெருவை 21 பேர் ஆக்கிரமித்துள்ளனர். வீடு, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வடிவங்களில் உள்ள இந்த ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் அலுவலர்கள் அவ்வப்போது சிறு சிறு அளவிலான ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றிவிட்டு சென்றுவிடுகின்றனர். அதனால் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்து விடுகின்றன. ஆகையால் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்தச் சாலையை அகலப்படுத்தி புதிதாக அமைத்து கொடுக்க வேண்டும்.

மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலையை அமைத்து, சாக்கடையையும் ஊராட்சி நிர்வாகம் அமைத்துவிட்டது. இதனால் சாலை மிகக் குறுகலாக உள்ளது. வாகனங்கள் செல்ல சிரமமாக இருக்கிறது. ஆகையால் ஆக்கிரமிப்புகளை சரியான அளவில் அகற்றி அரசாங்க இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

அப்போது சூரியூர் அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்த தாஸ், வேளாங்கண்ணி, அருள்தாஸ், ஜெகநாதன், ஆரோக்கியசாமி, மரியம் சந்தோஷ் மற்றும் ஏராளமானோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: சசிகலா தேர்தலில் போட்டியிடுவாரா? - டிடிவி தினகரன் பதில்!

ABOUT THE AUTHOR

...view details