தமிழ்நாடு

tamil nadu

School Issue: 'மாணவ - மாணவிகளை தரக்குறைவாக நடத்திய ஆசிரியை அறிக்கை வேண்டும்'

By

Published : Dec 22, 2021, 5:48 PM IST

School Issue: அரசுப் பள்ளியில் மாணவ மாணவியரை சாதிய ரீதியாக துன்புறுத்திய ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அறிக்கை சமர்பிக்க ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளி
இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளி

திருப்பூர்:(School Issue):இடுவாய்ப் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை கீதா (45) கடந்த சில நாள்களுக்கு முன்பு மாணவ - மாணவிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி, சாதிப்பெயரைச் சொல்லி திட்டி, கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்ததாகப் புகார் எழுந்தது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷிடம் புகார் தெரிவித்தனர். அந்தப் புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ் சென்று விசாரணை நடத்தினார்.

பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியர் கீதாவை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கடந்த சில நாள்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் மற்றும் எஸ்.பி. சசாங் சாய் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில் பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக விரைவாக அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: கொடைக்கானலில் சிறுமி சந்தேகத்திற்குரிய வகையில் மரணம்: நீதி கேட்டு வலுக்கும் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details