தமிழ்நாடு

tamil nadu

காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் மீண்டும் எழுச்சியுடன் செயல்படும்:கார்த்தி சிதம்பரம்!

By

Published : Jan 24, 2021, 10:29 PM IST

காங்கிரஸ் கட்சிக்கு பெரும் செல்வாக்கு கிடைத்துள்ளது, காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் மீண்டும் எழுச்சியுடன் செயல்படும் என கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Karthik chidambaram
Karthik chidambaram

திருப்பூர்: ராகுல் காந்தி உரையாற்றும் நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆய்வுமேற்கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, ஜனவரி 24ஆம் தேதி, மக்கள் சங்கமம் நிகழ்வில், தாராபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையில் மக்களை சந்தித்து உரையாற்றினார்.

முன்னதாக அந்தப் பகுதிக்கு நேரில் சென்ற மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு, தாராபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் காளிமுத்து உடன் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், இளம் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் மூன்று நாள் சுற்றுப் பயணத்தில் மக்களோடு மக்களாக உரையாற்றுகிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் செல்வாக்கு கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் மீண்டும் எழுச்சியுடன் செயல்படும் ” என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details