தமிழ்நாடு

tamil nadu

திமுகவைப் பின்னுக்குத் தள்ளி 2ஆம் இடம் பிடித்த ஹரி நாடார்!

By

Published : May 2, 2021, 6:36 PM IST

திருநெல்வேலி: ஆலங்குளம் தொகுதி வேட்பாளர் ஹரிநாடார் 16 ஆயிரத்து 825 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

hari-nadar-gives-tough-fight-to-aiadmk-dmk-in-alangulam-constituency
hari-nadar-gives-tough-fight-to-aiadmk-dmk-in-alangulam-constituency

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 150-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வெற்றிவாகை சூடியுள்ளது. பல இடங்களில் மற்ற கட்சிகளுக்கு டஃப் கொடுத்த திமுகவிற்கு சுயேச்சை வேட்பாளர் ஒருவர் டஃப் கொடுத்துள்ளார்.

அவர்தான் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட ஹரி நாடார். கழுத்தில் நிறைய நகைகள் அணிந்து வலம்வரும் இவர் பனங்காட்டு படை கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். இவருக்கு எதிராக அதிமுக சார்பில் மனோஜ் பாண்டியனும் திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணாவும் போட்டியிட்டனர்.

தற்போதைய நிலவரப்படி ஹரிநாடார் 16 ஆயிரத்து 825 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 17 ஆயிரத்து 989 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். திமுக வேட்பாளர் பூங்கோதை 16 ஆயிரத்து 691 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இதன்மூலம் திராவிட கட்சிகளுக்கே டஃப் கொடுத்த சுயேச்சை வேட்பாளராக இவர் உருவெடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details