தமிழ்நாடு

tamil nadu

மஞ்சள் விளைச்சல் அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி!

By

Published : Jan 2, 2022, 4:39 PM IST

பொங்கல் பண்டிகை வரும் சமயத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மஞ்சள் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

turmeric cultivation in thoothukudi
மஞ்சள் விளைச்சல் அதிகரிப்பு

தூத்துக்குடி: பொங்கல் பண்டிகை என்றாலே செங்கரும்பும், மஞ்சள் கொத்தும் தான் நினைவுக்கு வரும்.

இப்பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் குலை தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. மாவட்டத்தில் சக்கம்மாள், சிவத்தையாபுரம், சிவஞானபுரம், சாயர்புரம், சேர்வைகரன்மடம் உள்ளிட்ட இடங்களில் பொங்கல் பண்டிகைக்கு அறுவடை செய்ய சுமார் 500 ஏக்கரில் மஞ்சள் பயிர் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளதால் மஞ்சள் நல்ல விளைச்சல் கண்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் இங்கு விளையும் மஞ்சள் தமிழ்நாடு மட்டுமல்லாது டெல்லி, மும்பை, பெங்களூரு, குஜராத் போன்ற மாநிலங்களிலும், உலக நாடுகளான கனடா, பாரீஸ் போன்றவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மஞ்சள் விளைச்சல் அதிகரிப்பு

இதுகுறித்து விவசாயி வெற்றிவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மீண்டும் மஞ்சள் பை கொண்டு வந்ததற்கு விவசாயிகள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேபோல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் பயன்பெரும் வகையில் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் இரண்டு மஞ்சள் குலையை சீதனமாக வழங்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நல்ல மழைபெய்துள்ளதால் மஞ்சள் விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும் இந்தாண்டு கூலிகள் அதிகரித்துள்ளதால் மஞ்சள் குலை ஒன்றுக்கு ரூ.18 வரை செலவு ஆகும் சூழல் உள்ளதால் ரூ. 50க்கு விற்றால் தான் கட்டுப்படியாகும்' எனக் கூறினார்.

இதையும் படிங்க: முழுவீச்சில் தயாராகும் பொங்கல் பரிசுத் தொகுப்பு: குறித்த நேரத்தில் வழங்கப்படுமா?

ABOUT THE AUTHOR

...view details