தமிழ்நாடு

tamil nadu

ஒண்டி வீரன் நினைவு தபால் தலையை ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டார்

By

Published : Aug 20, 2022, 6:36 PM IST

Updated : Aug 20, 2022, 7:28 PM IST

இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஓண்டி வீரன் தபால் தலையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரன்
இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரன்

திருநெல்வேலி: இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 20) திருநெல்வேலியில் உள்ள கேடிசி நகர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த தபால் தலையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன், சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒண்டி வீரன் நினைவு தபால் தலை

முன்னதாக 75ஆவது சுதந்திர அமிர்தப் பெருவிழாவின் ஒருபகுதியாக மத்திய மக்கள் தொடர்பகம், சென்னை மண்டல அலுவலகம் சார்பில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 'இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு - அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள்' குறித்த புகைப்படக் கண்காட்சி தொடங்கப்பட்டது. இதனை இணையமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஸ்மார்ட் சிட்டி அறிக்கை - முதலமைச்சர் ஸ்டாலினிடம் தாக்கல்

Last Updated : Aug 20, 2022, 7:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details