தமிழ்நாடு

tamil nadu

CCTV:பாளையங்கோட்டை அருகே காவலாளி தாக்கப்பட்ட சிசிடிவி காட்சி வெளியானது

By

Published : Aug 23, 2022, 9:26 PM IST

பாளையங்கோட்டை அருகே தனியார் நிறுவனத்தில் காவலாளியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Etv Bharat
Etv Bharat

திருநெல்வேலி:பாளையங்கோட்டை பகுதியைச்சேர்ந்தவர் செல்வராஜ்(59). பாளையங்கோட்டை-திருச்செந்தூர் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி செல்வராஜ் பணியில் இருந்தபோது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கேட் முன்பு சந்தேகப்படும் விதமாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

அதற்கு செல்வராஜ் இங்கே வாகனத்தை நிறுத்தக்கூடாது எனக் கூறியதைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனிடையே அந்நபர் செல்வராஜை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால், தன்னைத்தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, செல்வராஜ் தற்போது பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரில் அவர், 'சம்பவத்தன்று TN72 AA3272 என்ற நம்பர் கொண்ட வாகனத்தில் வந்த நபர் தான் பணிபுரியும் நிறுவனத்தின் கேட் முன்பு வாகனத்தை நிறுத்தியதால், இங்கு நிறுத்த வேண்டாம் என அவரிடம் கூறினேன். அதற்கு உனது முதலாளியினைக் கூப்பிடு என்று தகாத வார்த்தைகள் கூறி, திட்டியதுடன் தன்னை சரமாரியாகத் தாக்கினார். எனவே, எந்த வித காரணமும் இல்லாமல் என் மீது தாக்குதல் நடத்திய அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனுவில் கூறியுள்ளார்.

CCTV:பாளையங்கோட்டை அருகே காவலாளி தாக்கப்பட்ட சிசிடிவி காட்சி வெளியானது

இதற்கிடையே காவலாளி செல்வராஜ் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் இன்று (ஆக.23) சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: சேலத்தில் பேருந்து படிக்கட்டில் நின்ற நடத்துநர் தவறி விழுந்து உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details