தமிழ்நாடு

tamil nadu

சட்டப்பேரவையில் சட்ட வரைவு ஏற்படுத்த பிசியோதெரபி மாநாட்டில் தீர்மானம்!

By

Published : Oct 20, 2019, 11:40 PM IST

சேலம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிசியோதெரபி கழகத்தின் சட்ட வரைவை நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை மாநில பிசியோதெரபி கழகம் முன்வைத்துள்ளது.

Physiotherapy conference in salem

சேலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சர்வதேச அளவிலான பிசியோதெரபி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிசியோதெரபி மருத்துவர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு ஆய்வு அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து மாநாட்டில், “தமிழ்நாட்டில் இயங்கிவரும் பிசியோதெரபி கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களையும், விரிவுரையாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும், தமிழ்நாடு மாநில பிசியோதெரபி கழகம் சட்டவரைவைக் கொண்டுவந்து, சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும்” ஆகிய மூன்று அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

சேலத்தில் நடைபெற்ற சர்வதேச பிசியோதெரபி மாநாடு

இந்த மாநாட்டில் வெவ்வேறு ஊர்களிலிருந்து மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

Intro:சேலத்தில் நடைபெற்ற சர்வதேச பிசியோதெரபி மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில பிசியோதெரபி கவுன்சில் சட்ட வரைவு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Body:சேலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சர்வதேச அளவிலான பிசியோதெரபி மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிஸியோதெரபி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து மாநாட்டில் தமிழகத்தில் இயங்கிவரும் பிசியோதெரபி கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும், தமிழ்நாடு மாநில பிசியோதெரபி கவுன்சில் சட்டப்பேரவை கொண்டுவந்து சட்ட மாற்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பன மூன்று அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றினர். இந்த மாநாட்டில் வெவ்வேறு ஊர்களில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

பேட்டி: செந்தில்குமார்--பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சேலம்


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details