தமிழ்நாடு

tamil nadu

சிதம்பரம் கைது: களமிறங்கிய 10 பேர்... கொடியை தலைகீழாக பிடித்து போராடிய தொண்டன்

By

Published : Sep 8, 2019, 12:18 PM IST

சேலம்: சிதம்பரத்தை விடுதலை செய்ய வலியுறுத்தியும் அவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் வெறும் பத்துக்கு மேற்பட்டோரே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் ஒரு தொண்டன் கட்சிக் கொடியை தலைகீழாக பிடித்து போராடியுள்ளார்.

protest

மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிதம்பரத்தை விடுதலை செய்ய வலியுறுத்தியும் அவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அவரின் ஆதரவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மட்டுமே கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தின்போது காங்கிரஸ் கட்சியின் கொடியை தொண்டர் ஒருவர் தலைகீழாக பிடித்திருந்தார்.

சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

அப்போது அந்த வழியே சென்ற பொதுமக்கள் சிலர் காங்கிரஸ் கட்சியின் கொடி தலைகீழாக பிடிக்கப்பட்டுள்ளதை அறிந்து இது பற்றி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.

அதன்பின்னர் கட்சியின் கொடியை நேராக மாற்றி 'விடுதலை செய் விடுதலை செய்! சிதம்பரத்தை விடுதலை செய்!' என கோஷமிட்டு மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Intro:காங்கிரஸ் கொடியை தலைகீழாக பிடித்து ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு.Body:
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கைது செய்ததை கண்டித்து சேலத்தில் சிதம்பரம் ஆதரவாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் .

காங்கிரஸ் கொடியை தலைகீழாக பிடித்து ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு.

சிதம்பரத்தை விடுதலை செய்ய வலியுறுத்தியும், அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சேலத்தில் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது காங்கிரஸ் கட்சியின் கொடி தலை கீழாக பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சிதம்பரத்தை விடுதலை செய்ய வலியுறுத்தியும், அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும்சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர் .

இதில் 10க்கும் மேற்பட்ட காங்கிரசார் மட்டுமே கலந்து கொண்டனர்.
இவர்களில் காங்கிரஸ் கொடி பிடித்த தொண்டர் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் கொடியை தலைகீழாக பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தார்.

விடுதலை செய்
விடுதலை செய். சிதம்பரத்தை விடுதலை செய். என்பது போன்ற கோஷங்களை அனைவரும் முழங்கினர்.

அப்போது அந்த வழியே சென்ற பொதுமக்கள் சிலர் காங்கிரஸ் கட்சியின் கொடி தலைகீழாக பிடிக்கப்பட்டுள்ளதை அறிந்து இது பற்றி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.

அப்போதுதான் நிர்வாகிகளுக்கு கட்சியின் கொடி தலைகீழாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் .பின்னர் கட்சியின் கொடி மீண்டும் மாற்றி கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த பிரச்சனையால் ஆர்ப்பாட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. Conclusion:

ABOUT THE AUTHOR

...view details