தமிழ்நாடு

tamil nadu

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வீணை இசை வழிபாடு...

By

Published : Oct 6, 2022, 7:52 AM IST

விஜயதசமியை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் வீணை இசை வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது

Etv Bharat
Etv Bharat

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த (செப்.26) ஆம் தேதி துவங்கிய நவராத்திரி விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கோவிலில் பல்வேறு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.

ஒவ்வொரு நாளும் மாலையில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. நவராத்திரி விழாவின் 9-ஆம் நாளான நேற்று(அக்.05) விஜயதசமியை
முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கல்வி மேம்பட வேண்டி, கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வீணை இசை வழிபாடு

இந்த நிகழ்ச்சியில் மதுரை, சென்னை, நாமக்கல், திண்டுக்கல், ஆகிய பகுதிகளில் இருந்து மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வீணை இசை வழிபாடு

வீணை வழிபாட்டின் போது மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் பாடல்கள் பாடப்பட்டன, விநாயகர் பாடல் உட்பட 22 பாடல்கள் வீணை இசை வழியே இசைக்கப்பட்டன.

இதையும் படிங்க: இளையான்குடி பேருந்து நிலையம் அமைக்க அரசு நிலத்தில் மணல் கொள்ளை - சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details