தமிழ்நாடு

tamil nadu

சாத்தூர் பட்டாசு வெடி விபத்து; நிவாரண வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

By

Published : Dec 7, 2021, 5:22 PM IST

Updated : Dec 7, 2021, 9:43 PM IST

விருதுநகர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மீண்டும் ஒத்திவைத்தது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை:விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ பாலசுப்ரமணியன் உள்ளிட்ட 6 பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தனித்தனியாக மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த சிப்பிபாறையில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் தங்களது உறவினர்கள் ஆறு பேர் சிக்கி உயிரிழந்தனர். அவர்களுக்கு அரசு சார்பில், 10 லட்ச ரூபாய் நிவாரணமும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவிக்கப்பட்டது.

அத்துடன் தற்காலிக நிவாரணமாக 1 லட்சம் ரூபாய் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நிவாரணமும் வேலையும் வழங்கப்படவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வருவாய் இழந்து, தவித்து வருகின்றனர். எனவே அரசு அறிவித்த நிவாரணங்களை உடனடியாக வழங்க உத்தவிடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கினை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். ஏற்கனவே, இந்த வழக்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டதும், அரசு நிவாரணம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சாத்தூர் பட்டாசு விபத்து நிவாரண வழக்கு: டிச. 6 அன்று இறுதி உத்தரவு

Last Updated : Dec 7, 2021, 9:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details