தமிழ்நாடு

tamil nadu

2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு

By

Published : Aug 9, 2021, 6:06 AM IST

மதுரையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வழக்கறிஞர் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஆறு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

மதுரை:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேவுள்ள கோவிலூரைச் சேர்ந்தவர் காசிமணி (46). இவரும், தனது மனைவி ராமு களஞ்சியம், மகன் ராகுல், மருமகன் தலைமலை, உறவினர் கௌதம் ஆகிய ஐந்து பேரும் திருமண நிகழ்வுக்காக புத்தாடைகள் வாங்க மதுரைக்கு காரில் சென்றனர்.

கார் விபத்து

புத்தாடைகள், நகைகளை எடுத்துவிட்டு மீண்டும் கோவிலூர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கார், திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டி - குன்னத்தூர் இடையே சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

கார் விபத்து

இந்த விபத்தில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை நோக்கி காரில் பயணம் செய்த மதுரை கோ.புதூரைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஜுபுதின் (45), உடன் வந்த ஓட்டுநர் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், அந்த காரில் படுகாயமடைந்த ஒருவர், துணி எடுக்கச் சென்ற ஐந்து பேர் என ஆறு பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைக்கப்பட்டனர்.

போலீஸ் விசாரணை

விபத்து குறித்து தகவலறிந்து வந்த டி.கல்லுப்பட்டி தீயணைப்பு மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி, காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த மூவரது உடலையும் போராடி மீட்டனர். இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு வந்த பேரையூர் டிஎஸ்பி தலைமையிலான காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்கறிஞர் சென்ற கார்

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த இருவர் அடையாளம் தெரியாததால் அவர்களது விவரங்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஃபாஸ்ட் புட் கடையில் தீ விபத்து: புரோட்டா மாஸ்டர் உள்பட 5 பேர் காயம்

ABOUT THE AUTHOR

...view details