தமிழ்நாடு

tamil nadu

முதல்முறையாக முல்லைப்பெரியாறு அணையில் நான்கு அமைச்சர்கள் ஆய்வு!

By

Published : Nov 5, 2021, 4:21 PM IST

முல்லைப் பெரியாறு அணையில், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அமைச்சர்கள் ஆய்வுப் பணிக்காக படகு குழாமில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

நான்கு அமைச்சர்கள் ஆய்வு
நான்கு அமைச்சர்கள் ஆய்வு

மதுரை:கேரளாவைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதனடிப்படையில் அணையின் நீர்மட்டத்தை இடைக்காலமாக குறைக்க வேண்டும் என நவம்பர் 11ஆம் தேதிக்கு இதுதொடர்பான வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா பகுதிக்கு முல்லைப் பெரியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதற்கு தென் தமிழ்நாடு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், இன்று (நவ.05) முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 138.80 அடியாக உள்ள நிலையில், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அமைச்சர்கள், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆகியோர் அணைப்பகுதியில் உள்ள மெயின் அணை, பேபி அணை, 13 ஷட்டர் பகுதி, கேலரி பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

அணையை ஆய்வு செய்த 4 அமைச்சர்கள்

இந்த ஆய்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளீதரன், மற்றும் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆகியோர் அணைப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளவதற்காக தேக்கடி படகு குழாமில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அமைச்சர்கள் ஆய்வு

அணையின் ஆய்வுக்கு நான்கு அமைச்சர்கள் செல்வது இதுவே முதல்முறை ஆகும். அமைச்சர்களின் இந்த ஆய்வில் தமிழ்நாடு மற்றும் கேரள பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடன் சென்றனர்.

நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி , உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். சந்தீப் சக்சேனா, காவேரி தொழில்நுட்ப குழுமத் தலைவர் சுப்பிரமணியன், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, கம்பம் சட்டபேரவை உறுப்பினர் என். ராமகிருஷ்ணன் ஆகியோரும் ஆய்வு செய்தனர்.

மேலும், ஆண்டிப்பட்டி சட்டபேரவை உறுப்பினர் ஆ. மகாராஜன், பெரியகுளம் சட்டபேரவை உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், மதுரை வடக்கு சட்டபேரவை உறுப்பினர் கோ. தளபதி, சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.வெங்கடேசன், பெரியார் அணை தலைமை பொறியாளர் கிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் க. ரமேஷ், கூடுதல் தலைமை பொறியாளர் ஞானசேகரன், கண்காணிப்பு பொறியாளர் சுகுமாரன் செயற் பொறியாளர் சியாம், முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் உட்பட பலர் உடன்சென்றனர்.

இதையும் படிங்க:சிரித்த முகத்துடன் நீங்கா இடம் பிடித்துள்ள புனித் - நடிகர் சூர்யா

ABOUT THE AUTHOR

...view details