தமிழ்நாடு

tamil nadu

உசிலம்பட்டி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க. ஸ்டாலின்

By

Published : Oct 2, 2021, 4:04 PM IST

உசிலம்பட்டி பாப்பாபட்டி கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் திமுக அரசில் நிச்சயம் நிறைவேற்றப்படும்” என உறுதியளித்துள்ளார்.

கிராமசபை கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்
கிராமசபை கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்

மதுரை: உசிலம்பட்டி அருகேவுள்ள பாப்பாபட்டியில் இன்று (அக். 2) ஸ்டாலின் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஸ்டாலின், “கிராமங்களின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்தியாவின் வளர்ச்சி உள்ளது. மூன்றாவது அரசாங்கமாக இயங்கும் உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்துவது மிக மிக அவசியம்.

பல ஆண்டுகளாக பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் உள்ளிட்ட நான்கு கிராமங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போது, தமிழ்நாடு முதலமைச்சராக கருணாநிதி இருந்தார், நான் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்தேன்.

கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றப் பின்னர் பல்வேறு வாக்குறுதிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிவருகிறோம். அந்த அடிப்படையில் உசிலம்பட்டி மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்றும்.

இந்தக் கிராம சபைக் கூட்டத்திலும் கிராமம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை கண்டிப்பாகத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றும்” என உறுதியளித்தார்.

கிராமசபைக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்

கதர் அங்காடியைத் தொடங்கிவைத்த ஸ்டாலின்

இதனைத் தொடர்ந்து செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கே. நாட்டாபட்டியிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க அலுவலகத்திற்கு சென்று ஆய்வுமேற்கொண்டார்.

கூட்டுறவுக் கடன் சங்க அலுவலகத்தில் ஆய்வு

பின்னர், மேலவாசி வீதியிலுள்ள கதர் மற்றும் கைத்தறி விற்பனை நிலையத்தில் அமைந்துள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஸ்டாலின் கதர் அங்காடியின் முதல் விற்பனையைத் தொடங்கிவைத்தார்.

காந்தி சிலைக்கு மரியாதை

இதையும் படிங்க:'நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு உறுதி'

ABOUT THE AUTHOR

...view details