தமிழ்நாடு

tamil nadu

பைக் மீது மாடு மோதியதில் சமூக ஆர்வலர் உயிரிழப்பு!

By

Published : Aug 28, 2020, 8:36 PM IST

Updated : Aug 28, 2020, 10:35 PM IST

மதுரை மாவட்டம் கோபால்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது மாடு மோதிய விபத்தில், சமூக ஆர்வலர் பரிதாபமாக உயிரிழந்தார்.

siva
iva

மதுரை: கோபால்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது மாடு மோதிய விபத்தில், சமூக ஆர்வலர் சிவசோமசுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிவசோமசுந்தரம் (வயது 56), தானம் அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி திண்டுக்கல்லில் உள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இன்று (ஆக.28), மதுரையிலிருந்து நத்தம் வழியாக சாணார்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்றார்.

அப்போது கோபால்பட்டியைக் கடந்து குரும்பபட்டி விலக்கு அருகே பைக் சென்று கொண்டிருக்கையில் மாடு ஒன்று திடீரென மிரண்டு வந்து வாகனத்தில் மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், மரத்தில் மோதிய சிவசோமசுந்தரம், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக கொண்டு செல்லப்பட்டது.

சிவசோமசுந்தரத்தின் இறுதி சடங்குகள் நாளை(ஆக.29) நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்‌. சிவசோமசுந்தரம் பல்வேறு சமூகப் பணிகள், கடந்த 35 வருடங்களுக்கு மேலாக ஈடுபட்டு வந்தார். குறிப்பாக, வெளிநாடுகளில் கொத்தடிமைகளாக இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களைக் காப்பாற்றி தாயகத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

சிவசோமசுந்தரத்தின் இறப்பு குறித்து அவரது நண்பர் சேரன் கூறுகையில், "சிவசோமசுந்தரம் தன் வாழ்நாள் முழுக்க எளிய மக்களுக்காக பாடுபட்டார். தன் இறப்பிலும்கூட ஒரு மாட்டை காப்பாற்ற மரத்தில் மோதி உயிரிழந்துள்ளார். சிறு வயதிலிருந்தே எங்களுள் சேவை மனப்பான்மையை வளர்த்தது சிவசோமசுந்தரம்தான். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவரது இழப்பை அறிந்து அவரால் மீட்கப்பட்டவர்கள் கடலூரிலிருந்து இரு சக்கர வாகனத்திலேயே மதுரை வந்துள்ளனர். இது அவரது சேவைக்கு மக்கள் அளித்துள்ள சான்றாகும்" என்றார்.

Last Updated :Aug 28, 2020, 10:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details