தமிழ்நாடு

tamil nadu

நிதி முறைகேடு புகார்: ஊராட்சித் தலைவரை பதவி நீக்கம் செய்த மதுரை ஆட்சியர்

By

Published : Jun 6, 2022, 7:29 PM IST

நிதி மற்றும் நிர்வாக முறைகேடு தொடர்பான புகார் காரணமாக மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேடு ஊராட்சித்தலைவரை பதவி நீக்கம் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்த மதுரை ஆட்சியர்
ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்த மதுரை ஆட்சியர்

மதுரை:அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டைமேடு ஊராட்சி மன்றத்தலைவராக ஏ.ஜி.சர்மிளாஜி என்பவர், கடந்த ஊராட்சித்தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக இருந்து வருகிறார். அவர் ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

அப்புகாரை தொடர்ந்து, மதுரை மாவட்ட வாடிப்பட்டி வட்டாட்சியர் தலைமையில் அவரை நேரில் அழைத்து விளக்கம் கேட்கப்பட்டது. இந்நிலையில், அவர் அளித்த விளக்கம் குற்றச்சாட்டிற்கு ஏற்புடையதாக இல்லாத காரணத்தாலும் ஆய்வின் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டதாலும் ஊராட்சி மன்றத்தலைவரை தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு 205ன் கீழ் நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: தொடரும் ஆன்லைன் லோன் மோசடி- நூதன முறையில் மிரட்டிய வடமாநில கும்பல்

ABOUT THE AUTHOR

...view details