தமிழ்நாடு

tamil nadu

மதுரை வங்கி ஊழியருக்கு கரோனா: மூன்று நாள்கள் வங்கிக்கு விடுமுறை

By

Published : Apr 8, 2021, 5:24 PM IST

Updated : Apr 8, 2021, 5:45 PM IST

மதுரை: தெற்குமாசி வீதியில் உள்ள வங்கி ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, வங்கிக்கு மூன்று நாள்கள் விடுமுறை அளித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை வங்கி ஊழியருக்கு கரோனா தொற்று
மதுரை வங்கி ஊழியருக்கு கரோனா தொற்று

கரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மதுரையில் உள்ள வங்கி ஊழியருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி நடவடிக்கை

நாடு முழுவதும் கரோனா பரவல் இரண்டாவது அலையாக வேகம் எடுத்து வருகின்ற நிலையில், தமிழ்நாட்டில் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி, கரோனா பரிசோதனை அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல், தொற்று கண்டறியப்படும் நபர்கள் வசிக்கும் பகுதிகளை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வங்கி ஊழியருக்கு கரோனா

இந்நிலையில், மதுரை தெற்கு மாசி வீதியில் செயல்பட்டுவரும், ஆந்திரா வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கையாக வங்கி இன்றும் (ஏப். 8), நாளையும் (ஏப். 9) மூடப்பட்டு, வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

மூன்று நாள்கள் வங்கி விடுமுறை

இது வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநகராட்சி ஆணையர் உத்தரவு

மேலும், மதுரை மாநகர் பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்கள் உள்ள தெருக்கள் இன்று முதல் (ஏப். 8) மூடப்படும் எனவும் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'ஒரே குடும்பத்தில் பதினோரு பேருக்கு கரோனா'

Last Updated : Apr 8, 2021, 5:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details