தமிழ்நாடு

tamil nadu

ஜனவரி முதல் மே வரையிலும் தான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி- தமிழக அரசு

By

Published : Jul 9, 2022, 6:44 PM IST

பாலமேடு அருகே பள்ளப்பட்டியில் ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரிய மனு தொடர்பான விசாரணையில், ஜனவரி முதல் மே வரைதான் ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க இயலும் என தமிழக அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது.

மதுரைக்கிளை
மதுரைக்கிளை

மதுரை: பாலமேடு அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த மகாராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் பள்ளப்பட்டியில் ஸ்ரீமுத்தாலம்மன் கோயிலில் விழா குழுத் தலைவராக உள்ளேன். பள்ளப்பட்டி கிராமப் பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து 15.07.2022 அன்று திருவிழா நடத்த முடிவு செய்துள்ளனர்.

திருவிழாவில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது, முக்கியமாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறும். கடந்த 1994ஆம் ஆண்டு முதல் வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழாவின் போது பத்து காளை மாடுகள் மட்டுமே பங்கேற்கும் கிராம மக்களின் பழக்கம் மற்றும் நடைமுறையாகும்.

வடமாடு மஞ்சு விரட்டு நடத்த போலீசாரிடம் அனுமதி கோரினேன். ஆனால், எனது கோரிக்கையை பரிசீலிக்காமல், கரோனா பரவல் உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி எனது மனுவை நிராகரித்து விட்டனர். எனவே, பள்ளப்பட்டியில் ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் திருவிழாவில் ஜூலை 15ஆம் தேதி வடமாடு மஞ்சுவிரட்ட நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி அமர்வு முன்பு இன்று (ஜூலை9) விசாரணைக்கு வந்தது. அப்போது 'அரசு தரப்பில், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை தான் ஜல்லிகட்டு நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க இயலும் என விதிமுறையில் உள்ளது' என்றனர்.

மேற்கூறியவாறு குறிப்பிட்ட நீதிபதிகள் இது குறித்து பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் தமிழக அரசிடம் மனு அளித்து உரிய நிவாரணம் பெறலாம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ”ரத்தமும், போர்களமுமாய்” ; ’பொன்னியின் செல்வன்- முதல் பாகம்’ டீசர்

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details