தமிழ்நாடு

tamil nadu

42 பதக்கங்களைக்குவித்த இந்திய அணி; உகாண்டா பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் வரலாற்றுச்சாதனை

By

Published : Sep 20, 2022, 5:30 PM IST

உகாண்டாவில் நடைபெற்ற சர்வதேச பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்று 42 பதக்கங்களைக் குவித்ததுடன், 19 நாடுகள் கலந்து கொண்ட இந்தப்போட்டிகளில் வென்று முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது.

உகாண்டா பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் வரலாற்றுச் சாதனை
ச்உகாண்டா பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் வரலாற்றுச் சாதனை

மதுரை: உகாண்டாவில் நடைபெற்ற சர்வதேச பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளில் இந்திய அணி சார்பில் மொத்தம் 45 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு 42 பதக்கங்களைக் குவித்து, முதலிடம் பெற்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.

உலகத் தரவரிசைக்கான பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகள் ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் கம்பாலா நகரில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெற்றது. சிங்கப்பூர், ஜெர்மனி, எகிப்து, ஸ்பெயின் மற்றும் இந்தியா உள்பட 19 நாடுகள் இந்த பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்றன.

தமிழ்நாடு பாராபேட்மிண்டன் பயிற்சியாளர் பத்ரி நாராயணன் தலைமையில் உகாண்டா சென்ற தமிழ்நாடு வீரர்கள் மட்டும் 16 பதக்கங்களை வென்றுள்ளனர். போட்டிகள் முடிந்து அவர்கள் இன்று மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.

அப்போது இதுகுறித்து பத்ரி நாராயணன் கூறுகையில், “உகாண்டாவில் நடைபெற்ற இந்தப்போட்டியில் இந்தியாவிலிருந்து 45 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா மட்டுமே 12 தங்கம்; 14 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 42 பதக்கங்களை வென்றுள்ளது. பதக்கப்பட்டியலில் முதலிடத்தையும் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மட்டுமே 5 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களை வென்றுள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அதிக பதக்கங்களை வென்ற வீரர்களைக் கொண்ட அணியாகத் திகழ்கிறது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் அதிக பதக்கங்களை வென்ற நாடாகும்.

உகாண்டா போட்டிகளில் வென்றதன் மூலம் அடுத்து ஜப்பானில் நடைபெறக்கூடிய உலக சாம்பியன் போட்டிகளுக்கு இதிலிருந்து 3 பேர் தேர்வாகியுள்ளனர். இந்திய அரசு முழு ஒத்துழைப்பை வழங்கியது. இதிலிருந்து சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு லெவல் 2-க்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை தமிழ்நாடு வீரர்கள் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிருத்விராஜ் எனும் தமிழ்நாடு வீரர் மூன்று இறுதிப்போட்டிகளுக்குத் தேர்வாகி இரண்டில் தங்கம் வென்றார்.

அதேபோன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த நவீன் சிவக்குமார், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கத்துடன் டைட்டில் சாம்பியன் பட்டமும் வென்றார். ஓசூரைச் சேர்ந்த நித்யஸ்ரீ உலகத் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ளார். சென்னையைச் சேர்ந்த மனீஷா 1ஆவது இடத்தில் உள்ளார்.

தமிழ்நாடு வீரர்களின் ஆதிக்கம் உலக பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளில் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. நான் இது போன்ற போட்டிகளில் பங்கேற்றபோது போதுமான அங்கீகாரம் இல்லாத நிலையில், தற்போதுள்ள வீரர்களுக்குத் தொடர்ந்து அங்கீகாரம் கிடைப்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

உகாண்டா பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் வரலாற்றுச் சாதனை

வீரர், வீராங்கனைகளும் மிகுந்த ஆர்வத்தோடும் அர்ப்பணிப்போடும் பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்' என்றார்.

இதையும் படிங்க:சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ்; செக்குடியரசு வீராங்கனை ஒற்றையர் பிரிவில் சாம்பியன்

ABOUT THE AUTHOR

...view details