தமிழ்நாடு

tamil nadu

பாதிரியார் பொன்னையா கோவில்பட்டி டிஎஸ்பியிடம் ஒப்படைப்பு

By

Published : Jul 24, 2021, 6:03 PM IST

பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அவதூறாக பேசியதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பாதிரியார் பொன்னையா
பாதிரியார் பொன்னையா

மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் ஜூலை 18ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும், இந்து மதத்தையும் இழிவுப்படுத்தி அவதூறாக பேசிய வழக்கில் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தார்.

கன்னியாகுமரியில் இருந்து காரில் தப்பிச்சென்ற அவர், பல்வேறு பகுதிகளிலும் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், சென்னைக்கு தப்பிக்க இருப்பதாக காவல் துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து மதுரை மாவட்ட காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி - மதுரை - தூத்துக்குடி

இதனைத் தொடர்ந்து, மதுரை கள்ளிக்குடி அருகில் சென்னைக்கு சென்ற கார் ஒன்றை மடக்கிப் பிடித்தபோது அதில் ஜார்ஜ் பொன்னையா இருந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து மதுரை விருதுநகர் எல்லைக்கு உட்பட்ட கள்ளிக்குடி காவல் நிலையத்தில் சிலைமான் காவல் துறையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து, கள்ளிக்குடி காவல் துறையினர் அவரை கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் உதயசூரியனிடம் இன்று (ஜூலை 24) காலை ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து அவர் தூத்துக்குடிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையும் படிங்க: பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது!

ABOUT THE AUTHOR

...view details