தமிழ்நாடு

tamil nadu

முன்னாள் எம்எல்ஏ அப்பாவு மனு - மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

By

Published : Jan 27, 2021, 3:02 PM IST

ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அப்பாவு கோரிய மனுக்கள் குறித்து பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற கிளை
madurai branch High Court

ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அப்பாவு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், பேச்சிப்பாறை பகுதியில் கடந்த திமுக ஆட்சியில் உயர்த்தப்பட்டு 450 கனஅடி தண்ணீர் திறந்து வைக்கும் அளவிற்கு உயர்த்தி கட்டப்பட்டது. அந்த அணையில் தற்பொழுது நீர் நிரம்பி உள்ளது. இதில் இருந்து ராதாபுரம் பகுதிக்கு தினமும் 25 அடி கன அடி மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

ஆனால் விவசாயிகளின் கோரிக்கையான தினமும் 150 கனஅடி திறந்து விடப்பட்டதால் இப்பகுதியிலுள்ள 52 குணங்கள் திருப்பித் தர வேண்டும். இதனால் இப்பகுதியில் உள்ள 16 ஆயிரம் ஏக்கர் நேரடி பாசன வசதி பெறும். அதே போல ராதாபுரம் தொகுதியில் உள்ள 1012 ஏக்கர் பாசனம் பெறும். எனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து தினமும் 150 கனஅடி தண்ணீர் திறந்து 52 குளங்களையும் நிரம்பி தர உத்தரவிட வேண்டும்.

அதே போல, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி, அணைகள் நிறைந்து தண்ணீர், கருமேனியாறு நம்பியாறு, தாமிரபரணி வழியாக, ஏழாயிரம் கனஅடி முதல் 40 ஆயிரம் கனஅடி வரை வீணாக கடலில் கலக்கிறது. இந்த ஏன் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை மழையின்றி வறண்டு கிடக்கும் ராதாபுரம், திசையன்விளை சாத்தான்குளம், உடன்குடி, பகுதியில் உள்ள பாசன விவசாயிகள் பயன்படும் வகையில் தண்ணீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த இரு மனுக்களும், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: மனைவி ஏமாற்றியதால் பிற பெண்களை கொலை செய்தவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details