தமிழ்நாடு

tamil nadu

அரசு மருத்துவர்கள் முதுநிலை கல்வி பயில இட ஒதுக்கீடு கோரிய வழக்கு - சுகாதாரத்துறை பதிலளிக்க உத்தரவு

By

Published : Apr 30, 2020, 8:26 PM IST

மதுரை: பணியில் இருக்கும் அரசு மருத்துவர்கள் முதுநிலைக் கல்வி பயில்வதற்கான 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பட்டப்படிப்புக்கும் வழங்கக்கோரிய வழக்கில், தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு மருத்துவர்கள் முதுநிலை கல்வி பயில  இட ஒதுக்கீடு வழங்கக் கோரி வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளை
அரசு மருத்துவர்கள் முதுநிலை கல்வி பயில இட ஒதுக்கீடு வழங்கக் கோரி வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளை

பணியில் இருக்கும் அரசு மருத்துவர்கள் முதுநிலைக் கல்வி பயில்வதற்கான 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பட்டப்படிப்புக்கும் வழங்கக்கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த சந்தியா பிரியதர்ஷினி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் . அதில், "பணியில் இருக்கக்கூடிய அரசு மருத்துவர்கள், முதுநிலை மருத்துவக் கல்வி பயிலும் போது அவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட 545 இடங்களில் மூன்று இடங்கள் மட்டுமே பட்டயப்படிப்புகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள இடங்கள் பட்டப்படிப்புகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பணியில் இருக்கக்கூடிய, அரசு மருத்துவர்கள் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெற இயலாத நிலை உள்ளது. ஆகவே, பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு, 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பட்டப்படிப்புகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களிலும் வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை வீடியோ கான்ஃபெரன்சிங் முறையில் விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன் இதுதொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மைச் செயலரை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடர்பான நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

திருச்சி காவிரி மணல் குவாரி வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details