தமிழ்நாடு

tamil nadu

எகிறும் மதுரை மல்லி விலை... வாடிக்கையாளர்கள் அதிருப்தி...

By

Published : Sep 5, 2022, 8:12 AM IST

மதுரை பூ சந்தையில் மல்லியின் விலை கிலோ 23,00 ஆக எகிறியதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Etv Bharatஒரு கிலோ மதுரை மல்லி 2 ஆயிரத்தை தாண்டியது - பொதுமக்கள் அதிருப்தி
Etv Bharatஒரு கிலோ மதுரை மல்லி 2 ஆயிரத்தை தாண்டியது - பொதுமக்கள் அதிருப்தி

மதுரை பூ சந்தையில் மல்லியின் விலை கிலோ 2,300 ஆக அதிகரித்துள்ளது. அதன் காரணமாக வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த விலை ஓரிரு நாட்கள் தொடரும் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைந்துள்ளது ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டம் மட்டுமன்றி திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

குறிப்பாக மதுரை மல்லி நாளொன்றுக்கு சராசரியாக 50 டன்னுக்கும் மேல் விற்பனையாகும். அதுமட்டுமன்றி மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து பெற்ற மதுரை மல்லிகைக்கு உலகளாவிய மார்கெட் உள்ளது. மதுரை விமான நிலையம் வழியாக நாள்தோறும் மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

பருவமழையால் வரத்து குறைவு:மதுரை மாவட்டத்தில் பரவலாக பெய்து வருவதால் மதுரை மல்லியின் வரத்து குறைந்துள்ளது. அதனால் மதுரை மல்லி ரூ.2,300, பிச்சி ரூ.700, முல்லை ரூ.800, சம்பங்கி ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.200, செண்டுமல்லி ரூ.80 என்று விலை ஏற்றம் கண்டுள்ளது.


இதுகுறித்து மாட்டுத்தாவணி சில்லறை பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூக்கள் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வருவதால் விலையும் உயர்ந்துள்ளது. இது விலை மேலும் ஒரு சில நாட்கள் நீடிக்கும் என்றார்.

இதையும் படிங்க:மாநகராட்சி, நகராட்சிகளில் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details