தமிழ்நாடு

tamil nadu

தலைமைக் காவலரை மிரட்டிய போலி செய்தியாளர்கள் இருவர் கைது

By

Published : Jan 23, 2020, 8:46 AM IST

ஈரோடு: தலைமைக் காவலரை மிரட்டிய போலி செய்தியாளர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

fake reporters arrest
fake reporters arrest

ஈரோடு நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் செந்தில் குமார் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற மோகன்குமார், சுரேந்திரன் ஆகிய இருவரும் தாங்கள் தின காற்று என்ற பத்திரிகையைச் சேர்ந்த செய்தியாளர்கள் என தலைமைக் காவலரிடம் அறிமுகமாகியுள்ளனர்.

பின்னர் அவர்கள் காவல் நிலைய உள்பகுதியில் அனுமதியின்றி செல்போனில் மறைமுகமாக வீடியோ பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து கேட்ட தலைமை காவலர் செந்தில் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

போலி செய்தியாளர்களின் அடையாள அட்டை

இதனையடுத்து இருவரையும் காவலர்கள் பிடித்து விசாரணை செய்ததில் இருவரும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் கீழ் அங்கீகாரம் பெறாத போலி செய்தியாளர்கள் என்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் ஈரோடு நகர காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: வில்சன் கொலை வழக்கு: மேலும் மூன்று குற்றவாளிகள் சிக்கினர்!

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன22

தலைமைக் காவலரை மிரட்டிய போலி செய்தியாளர்கள் இருவர் கைது!

ஈரோட்டில் தலைமைக் காவலரை மிரட்டிய போலி செய்தியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு நகர காவல் நிலையத்தில் தலைமை காவலர் செந்தில் குமார் பணி செய்து கொண்டு இருந்த போது தின காற்று என்ற பத்திரிகையை சேர்ந்த போலி செய்தியாளர்கள் மோகன்குமார், சுரேந்திரன் ஆகிய இருவரும் தாங்கள் செய்தியாளர்கள் என அறிமுகப்படுத்தி கொண்டு காவல் நிலைய உள்பகுதியில் அனுமதியின்றி செல்போனில் மறைமுகமாக வீடியோ பதிவு செய்து உள்ளனர்.

இதனை கேட்ட தலைமை காவலர் செந்தில் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியும் , கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். Body:இதனை அடுத்து இருவரையும் காவலர்கள் பிடித்து விசாரணை செய்ததில் இருவரும் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கீழ் அங்கீகாரம் பெறாதவர்கள் என்றும் தெரியவந்தது.

Conclusion:இதனை அடுத்து இருவரையும் ஈரோடு நகர காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details