தமிழ்நாடு

tamil nadu

ஈரோட்டில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை

By

Published : May 29, 2020, 2:04 PM IST

ஈரோடு: வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்த நிலையில் ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

People Happy due to the two hours Rain
People Happy due to the two hours Rain

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக பகல் நேரங்களில் வழக்கமான போக்குவரத்துகள் இருக்கின்றன.

ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் காரணமாக பகல் நேரத்தில் கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதனிடையே நேற்று மாலையில் பலத்த காற்று வீச தொடங்கியது. பின்னர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

ஈரோடு நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சோலார், மூலப்பாளையம், கொல்லம்பாளையம், அக்ரஹாரம், சென்னிமலை சாலை, பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதியில் கனமழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து ஈரோட்டில் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருகின்றது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை

இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையினால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. மேலும், தண்ணீர் தட்டுப்பாடு தலைதூக்க தொடங்கியுள்ள சூழலில் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details