தமிழ்நாடு

tamil nadu

குரூப் 4 தேர்வு - மேற்பார்வையாளர் உதவியுடன் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி

By

Published : Jul 24, 2022, 1:26 PM IST

சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியில் இன்று(ஜூலை.24) பலத்த பாதுகாப்புடன் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளி மாணவர் மேற்பார்வையாளர் உதவியுடன் தேர்வெழுதினார்.

பலத்த பாதுகாப்புடன் நடந்த குரூப் 4 தேர்வு
பலத்த பாதுகாப்புடன் நடந்த குரூப் 4 தேர்வு

தமிழ்நாட்டில் இன்று(ஜூலை.24) குரூப் 4 தேர்வு நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியில் தேர்வெழுதுவோர் காவல்துறையினரின் அடையாள அட்டை பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். காலை 8.30 மணிக்கு பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அதன் பின் தேர்வு மேற்பார்வையாளர்களுக்கு தேர்வுக்கான விதிமுறைகளை குறித்து வகுப்பு எடுக்கப்பட்டு அந்தந்த அறைக்கு சென்றனர். அடையாள அட்டையுடன் ஹால் டிக்கெட் சரிபார்த்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக வீடியோ பதிவுடன் விடைத்தாள் பிரிக்கப்பட்டு தேர்வெழுதுவோருக்கு வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிக்கு தனி மேற்பார்வையாளர்

இந்த தேர்வில் மாற்றுத்திறனாளி விடை சொல்ல, மேற்பார்வையாளர் விடைத்தாளில் குறித்துக்கொண்டார். தேர்வு தொடங்கியவுடன் பள்ளி வளாகத்தில் ஆட்கள் நடமாட அனுமதி மறுக்கப்பட்டது.

இதையும் படிங்க:தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது...

ABOUT THE AUTHOR

...view details