தமிழ்நாடு

tamil nadu

ஈரோடு அருகே விவசாயக்கண்காட்சி... எத்தியோப்பிய வேளாண் அமைச்சர் பங்கேற்பு

By

Published : Oct 11, 2022, 7:47 AM IST

Updated : Oct 11, 2022, 8:17 AM IST

எத்தியோப்பியா நாட்டு வேளாண்மைத்துறை அமைச்சர் உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவினர், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேளாண்மை அறிவியியல் நிலையத்தில் நடந்த இயற்கை விவசாயக் கண்காட்சியில் பங்கேற்றனர்.

Etv Bharat
Etv Bharat

ஈரோடு:எத்தியோப்பிய நாட்டு வேளாண்மைத்துறை அமைச்சர் மற்றும் 9 பேர் கொண்ட குழுவினர், கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள புதுவள்ளியாம்பாளையத்தில் உள்ள வேளாண்மை அறிவியியல் நிலையத்தில் நேற்று (அக்.10) நடந்த இயற்கை விவசாயம் குறித்த கண்காட்சியில் பங்கேற்று, இயற்கை விவசாய முறைகள் குறித்து வேளாண் அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.

புதுவள்ளியாம்பாளையத்தில் உள்ள வேளாண்மை அறிவியியல் நிலையத்திற்கு கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் எத்தியோப்பிய நாட்டு வேளாண்மைத்துறை அமைச்சர் மேல்ஸ் மேக்கோனன் இம்மர் மற்றும் அவருடன் 9 பேர் கொண்ட குழு விவசாயம் சார்ந்த செயல்பாடுகள் குறித்த தெரிந்துகொள்வதற்காக வந்திருந்தனர்.

விவசாயக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்கள்

அப்போது, அக்குழுவிற்கு தமிழ்நாடு வேளாண் துறை அலுவலர்கள் மலர் கொத்து கொடுத்தும் மாலை அணிவித்தும், பாரம்பரிய முறையில் நடனமாடி உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது வேளாண்துறை அமைச்சருடன் வந்த அக்குழுவினர் அங்கு இசைக்கப்பட்ட இசைக்கு ஏற்ப நடனக்கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினர். பின்னர், அக்குழுவினர் வேளாண் அறிவியல் நிலையத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த இயற்கை முறையில் விளைவித்த விவசாயப்பொருட்களின் கண்காட்சியினைப் பார்வையிட்டனர்.

தொடர்ந்து வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு உறுதுணையாக உள்ளது, வேளாண்துறைகள் மூலம் திட்டங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது, என்ன மாதிரியான இயற்கை உரங்களை விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது என்பனவற்றை அக்குழுவினர் கேட்டறிந்தனர்.

அதற்குப் பயன்படுத்தும் தொழிழ்நுட்பங்கள், இயற்கை விவசாயம் செய்வதும் குறித்தும், அதன்மூலம் அதிக மகசூல் செய்ய அரசு சார்பில் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகள், வேளாண்துறை மற்றும் தமிழ்நாடு அரசு விவசாயத்திற்கு எந்த மாதிரியான முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டப்பல்வேறு விவசாயம் சார்ந்த செயல்பாடுகள் குறித்து அங்குள்ள அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.

எத்தியோப்பிய வேளாண் அமைச்சர் விவசாய கண்காட்சியில் பங்கேற்பு

இதையும் படிங்க: National Health Missionல் பணி வாய்ப்பு

Last Updated : Oct 11, 2022, 8:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details