தமிழ்நாடு

tamil nadu

பேரறிவாளனை தியாகி ஆக கொண்டாட வேண்டாம்!- திருநாவுக்கரசு எம்பி கண்டனம்

By

Published : May 20, 2022, 9:00 AM IST

விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளவனை மற்ற அரசியல் கட்சிகள் தியாகி ஆக கொண்டாட வேண்டாம் என காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

பேரறிவாளனை தியாகியாக்கி கொண்டாட வேண்டாம்!- அரசியல் கட்சிகளுக்கு எம்பி திருநாவுக்கரசு கண்டனம்
பேரறிவாளனை தியாகியாக்கி கொண்டாட வேண்டாம்!- அரசியல் கட்சிகளுக்கு எம்பி திருநாவுக்கரசு கண்டனம்

ஈரோடு:ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து 10 நாட்கள் 250 கிலோமீட்டர் நடைபெற்ற நடைபயணத்தின் நிறைவுவிழா பெருந்துறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு, முன்னாள் எம்பி கே.வி. தங்கபாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேரறிவாளனை தியாகியாக்கி கொண்டாட வேண்டாம்!- அரசியல் கட்சிகளுக்கு எம்பி திருநாவுக்கரசு கண்டனம்

இதில், நடைபயணம் மேற்கொண்ட 53 காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த திருநாவுக்கரசு , விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளவனை மற்ற அரசியல் கட்சிகள் தியாகி ஆக கொண்டாட வேண்டாம் என்றும், இது வருத்தத்திலுள்ள காங்கிரஸ் தொண்டர்களை மேலும் வருத்தமடைய செய்யும் என்றார்.

இதையும் படிங்க:அற்புதம்மாள் வாழ்க்கையை படமெடுக்கிறாரா வெற்றிமாறன்..?

ABOUT THE AUTHOR

...view details